பணிப்பெண் பார்தி லியானியின் வழக்கு: நாடாளுமன்றத்தில் பேச சில்வியா லிம் புதிய விண்ணப்பம்

பணிப்பெண் பார்தி லியானியின் வழக்கு: நாடாளுமன்றத்தில் பேச சில்வியா லிம் புதிய விண்ணப்பம்

2 mins read
82fb433d-9c26-457d-98ad-a2a526b53b39
-

சாங்கி விமான நிலை­யக் குழு­மத்­தின் முன்­னாள் தலை­வர் லியூ மன் லியோங்­கின் முன்­னாள் பணிப்­பெண் குமாரி பார்­தி­யின் வழக்கு குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் பேச பாட்­டா­ளிக் கட்சி புதிய கோரிக்­கையை தாக்­கல் செய்­துள்­ளது. பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வர் திரு­வாட்டி சில்­வியா லிம்­மின் தனிப்­பட்ட உறுப்­பி­னர் விண்­ணப்­பத்­திற்கு அக்­கட்­சி­யின் செங்­காங் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹி டிங் ரு ஆத­ரவு தெரி­வித்­தி­ருப்­ப­தாக கட்­சி­யின் ஃபேஸ்புக் செய்தி தெரி­வித்­தது.

"சிங்­கப்­பூ­ரின் நீதித் துறை அடிப்­ப­டை­யாக, நேர்மை, எளி­தில் அணு­கக்­கூ­டிய தன்மை, சுதந்­தி­ரம் என்­பதை இந்த நாடா­ளு­மன்­றம் உறு­தி­ப­டுத்­தி­யது."வசதி அல்­லது சமூக அந்­தஸ்து போன்ற எந்த வேறு­பா­டு­க­ளு­மின்றி அனை­வ­ருக்­கும் கிடைக்­கக்­கூ­டிய நீதித் துறையை மேம்­ப­டுத்­த­வும், நீதித் துறையை மறுஆய்வு செய்­வது உட்­பட அதி­லுள்ள குறை­பா­டு­களை அங்­கீ­க­ரித்து அவற்றை சரி­செய்­யு­மாறு அர­சாங்­கத்தை கேட்­டுக்­கொள்­கி­றேன்," என்­பது அந்த விண்­ணப்­பம்.

லியூ குடும்­பத்­தி­ட­மி­ருந்து, $34,000 மதிப்­புள்ள பொருட்­களை திரு­டி­ய­தாக குமாரி பார்­திக்கு கடந்த ஆண்டு, இரண்டு ஆண்டு இரண்டு மாதங்­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. குடும்­பத்­தா­ரின் புகா­ரின் பேரில் தொடுக்­கப்­பட்ட குற்­ற­வி­யல் வழக்­கில் தீர்ப்பு பணிப்­பெண்­ணுக்­குச் சாத­க­மாக அமைந்­தது. குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து குமாரி பார்தியை சென்ற மாதம் மேல்முறையீட்டு நீதிமன்றம் ­விடுவித்தது.

சென்ற மாதம் திரு­வாட்டி லிம் தாக்­கல் செய்த ஒத்­தி­வைப்­புத் தீர்­மா­னம் அக்­டோ­பர் 5ஆம் தேதி கூடிய மன்­றத்­தின் விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. ஒத்­தி­வைப்­புத் தீர்­மா­னத்­தின் கீழ், நாடா­ளு­மன்ற அமர்­வின் இறு­தி­யில் உறுப்­பி­னர் 20 நிமி­டங்­கள் பேச­லாம். தொடர்ந்து அதற்கு 10 நிமி­டங்­கள் மறு­மொழி வழங்­கப்­படும். தனிப்­பட்ட விண்­ணப்­பத் தாக்­கல் குலுக்­கல் முறை­யில் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தில்லை.

இதற்­கி­டையே, சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம், குமாரி பார்த்தி லியானி வழக்கு தொடர்­பில் அடுத்த மாதம் நாடா­ளு­மன்­றத்­தில் அமைச்­சு­நிலை அறிக்­கையைத் தாக்­கல் செய்­ய­வி­ருக்­கி­றார்.