‘டிரேஸ்டுகெதர்’ கருவி, செயலி பயன்பாடு பற்றிய குறிப்புகள்

வரும் டிசம்­பர் இறு­திக்­குள் சிங்­கப்­பூ­ரில் உள்ள எல்லா பொதுக் கூடங்­க­ளி­லும் டிரேஸ்­டு­கெ­தர் கருவி அல்­லது டிரேஸ்­டு­கெ­தர் கைபே­சிச் செயலி கட்­டா­ய­மா­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. வேலை­ இ­டங்­கள், பள்­ளிக்கூடங்­கள், கடைத்­தொ­கு­தி­கள், உண­வ­கங்­கள் போன்­ற­வற்­றுக்கு இவற்­றில் ஏதா­வது ஒன்று அவ­சி­ய­மா­கும்.

டிரேஸ்­டு­கெ­தர் அடிப்­ப­டை­யி­லான சேஃப் என்ட்ரி பதிவை அனு­ம­திக்­கும் புதிய முறை இம்­மா­தம் முதல் கட்­டம் கட்­ட­மாக விரி­வு­ப­டுத்­தப்­படும் என கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு தெரி­வித்துள்ளது.

இந்த புதிய அம்­சங்­க­ளைப் பற்­றிய சிறு குறிப்புகள் இங்கு அளிக்­கப்­ப­டு­கின்றன. தற்­போது ‘க்யூ­ஆர்’ குறி­யீட்டை கைபேசி கேமரா மூலமோ சிங்­பாஸ் செயலி மூலமோ ‘ஸ்கேன்’ செய்து சேஃப் என்ட்ரி பதிவை மேற்­கொள்­கி­றோம். திறன் கைபேசி இல்­லா­த­வர்­கள் தங்­க­ளது அடை­யாள அட்­டை­யில் உள்ள ‘பார்­கோட்’ மூலம் சேஃப் என்ட்­ரிக்கு அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார்­கள். டிரேஸ்­டு­கெ­தர் அடிப்­ப­டை­யி­லான சேஃப் என்ட்ரி பதிவு முறை அறி­மு­கம் கண்ட பின்­னர் இவை எது­வும் தேவைப்­ப­டாது.

அடுத்­த­தாக, டிரேஸ்­டு­கெ­தர் செய­லி­யில் சேஃப்என்ட்ரி க்யூ­ஆர் குறி­யீட்டை ‘ஸ்கேன்’ செய்­வ­தற்­கான வசதி உள்­ளீடு செய்­யப்­பட்டு இருக்­கும். அத­னையே இனி பயன்ப­டுத்த வேண்­டும்.மாறாக, டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­யில் உள்ள க்யூ­ஆர் குறீ­யீட்­டை­யும் பொதுக் கூடங்­க­ளுக்­குள் நுழைய ஸ்கேன் செய்­ய­லாம்.

தற்­போது சேஃப்என்ட்ரி பதிவு முறை நடப்­பில் உள்ள எல்லா பொது இடங்­க­ளி­லும் டிரேஸ்­டு­கெ­தர் அடிப்­ப­டை­யி­லான சேஃப் என்ட்ரி முறை அறி­மு­கம் செய்­யப்­படும்.

டிரேஸ்­டு­கெ­தர் அடிப்­ப­டை­யி­லான சேஃப்என்ட்ரி எப்­போது முதல் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது என்­பது பற்­றி­யும் தெரிந்­து­கொள்­ள­லாம். அதி­கப்­ப­டி­யான பொது­மக்­கள் ஈடு­படும் நட­வ­டிக்­கை­கள் நிக­ழும் கூடங்­களில் இப்­போது முதல் நவம்­பர் நடுப்­ப­குதி வரை அறி­மு­கம் செய்­யப்­படும். திரை அரங்­கு­களில் வரும் திங்­கட்­கி­ழமை (அக்­டோ­பர் 26) முதல் அது தொடங்­கும்.

நூறு பேருக்கு மேல் பங்­கேற்­கும் வழி­பாட்­டுச் சேவை­கள் போன்­றவை நிக­ழும் இடங்­க­ளுக்­கும் இது விரி­வு­ப­டுத்­தப்­படும். தொடர்ந்து, நாட­ளா­விய கூடங்­கள் அனைத்­தி­லும் டிசம்­பர் இறு­திக்­குள் டிரேஸ்­டு­கெ­தர் அடிப்­ப­டை­யி­லான சேஃப்என்ட்ரி முறை அறி­மு­கம் செய்­யப்­பட்­டு­வி­டும்.

டிரேஸ்­டு­கெ­தர் கருவி பொது­மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வரு­கிறது.

தற்­போ­தைய நில­வ­ரப்­படி, 38 சமூக நிலை­யங்­களில் அல்­லது வெவ்­வேறு கடைத்­தொ­கு­தி­களில் அமைக்­கப்­பட்டு உள்ள 13 நட­மா­டும் கூடங்­களில் இவற்­றைப் பெற்­றுக்­கொள்­ள­லாம். வசிக்­கும் பகு­தி­யில் உள்ள இடங்­க­ளில்­தான் இவற்­றைப் பெற­வேண்­டும் என்­ப­தில்லை. கருவி வழங்­கப்­படும் இடங்­க­ளைப் பற்­றிய முழு­வி­வ­ரத்தை TokenGoWhere இணை­யப் பக்­கத்­தில் காண­லாம்.

நவம்­பர் மாத இறு­திக்­குள் தீவில் உள்ள எல்லா 108 சமூக நிலை­யங்­க­ளி­லும் இக்­க­ருவி கிடைக்­கும்.

சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் ஏழு வயது மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­தி­னர் அனை­வ­ரும் டிரேஸ்­டு­கெ­தர் கருவி அல்­லது செய­லி­யைப் பயன்­ப­டுத்­து­வது அவ­சி­யம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!