சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு தொற்று மீண்டும் ஈரிலக்கம்

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு தொற்று மீண்டும் ஈரிலக்கம்

1 mins read
e8cb6534-e9e7-4440-a529-0670818d604b
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தாக 12 பேருக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்டு உள்­ள­தாக சுகா­தார அமைச்சு அதன் அன்­றாட முதற்­கட்ட அறி­விப்­பில் தெரி­வித்­தது. கிரு­மிப் பர­வல் தொடங்­கி­யது முதல் ஆக அண்­மைய நில­வ­ரத்தை இரு கட்­டங்­க­ளாக அமைச்சு அறி­வித்து வரு­கிறது. நண்­ப­கல் வரை­யி­லான நில­வ­ரத்தை அது தனது முதற்­கட்ட அறிக்­கை­யில் தெரி­விப்­ப­தோடு அதற்­குப் பிந்­திய விவ­ரங்­களை இர­வில் வெளி­யிட்டு வரு­கிறது.

புதிய 12 தொற்­றா­ளர்­களும் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள் என்­றும் அவர்­கள் இங்கு வந்­தது முதலே கட்­டாய இல்­லத் தனி­மை­யில் வைக்­கப்­பட்­ட­வர்­கள் என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது. வெளி­நா­டு­களில் இருந்து வந்த தொற்­றா­ளர்­க­ளின் எண்­ணிக்கை ஈரி­லக்­கத்­தில் பதி­வாகி இருப்­பது இம்­மா­தத்­தில் இரண்­டா­வது சம்­ப­வ­மா­கும்.

அக்­டோ­பர் 1ஆம் தேதி அந்த எண்­ணிக்கை 15 என அறி­விக்­கப்­பட்­டது. உள்­ளூ­ரில் புதி­தாக எவ­ருக்­கும் கிரு­மிப் பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை. புதிய 12 பேரை­யும் சேர்த்து சிங்­கப்­பூ­ரில் இது­வரை பதி­வான கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 57,933 ஆகும்.