59,000 துப்புரவாளர்களுக்கு தலா $150 பற்றுச்சீட்டு விநியோகம்

59,000 துப்புரவாளர்களுக்கு தலா $150 பற்றுச்சீட்டு விநியோகம்

1 mins read
28072467-2cad-46ec-842e-deda823c8a64
துப்புரவுப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று 'அவர் தெம்பனிஸ் ஹப்' மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'கார்ச்சர்' தெற்காசியா நிறுவனத்தின் வட்டாரத் தலைவர் திரு கிளாவ்ஸ் புமேயரிடமிருந்து (நடுவில்) அன்பளிப்புப் பையைப் பெறுகிறார் 68 வயது துப்புரவுப் பணியாளர் திரு கோ எங் சியோங் (இடது). வலக்கோடியில் இருப்பவர் 'ஐஎஸ்எஸ் ஃபெசிலிட்டி சர்வீசஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திருவாட்டி ஜீனா டோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அவர் தெம்­ப­னிஸ் ஹப் மையத்­தில் வேலை செய்­யும் 'ஐஎஸ்­எஸ் ஃபெசிலிட்டி சர்­வீ­சஸ்' நிறு­வ­னத்­தின் 30 பணி­யா­ளர்­கள் நேற்­றுக் காலை ஒரு மணி நேரத்­துக்கு பணி ஓய்வையும் சுவை­யான காலை உண­வை­யும் பற்­றுச்­சீட்­டை­யும் பெற்­ற­னர்.

துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கும் வகை­யில் 'கார்ச்­சர்' தெற்­கா­சியா நிறு­வ­ன­மும் சிங்­கப்­பூர் சுற்­றுச்­சூ­ழல் நிர்­வா­கச் சங்­க­மும் இணைந்து தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தின் ஆத­ர­வு­டன் சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்­றும் 59,000 துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­க­ளுக்கு தலா $150 பற்­றுச்­சீட்­டு­களை இம்­மாத இறு­திக்­குள் வழங்­கும்.

இந்­தப் பற்­றுச்­சீட்­டைக் கொண்டு மளி­கைப் பொருட்­க­ளு­டன் இதர சேவை­க­ளை­யும் துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­கள் பெற்­றுக்­கொள்­ள­லாம். பொதுச் சுகா­தார மன்­றம் கடந்த மாதம் தொடங்கிய 'சிங்­கப்­பூ­ரைத் தூய்­மை­யாக வைத்­தி­ருங்­கள்' இயக்­கம்­ தொடர்­பான நிகழ்ச்­சி­கள் இம்­மா­தம் 31ஆம் தேதி வரை பல்­வேறு இடங்­களில் நடைபெறும்.