வேலைக்கு ஏற்ப மக்களைத் தயார்ப்படுத்தும் புதிய ஐந்தாண்டு திட்டம் தொடங்கியது

வேலைக்கு ஏற்ப மக்களைத் தயார்ப்படுத்தும் புதிய ஐந்தாண்டு திட்டம் தொடங்கியது

2 mins read
624bfa0b-eaf2-424d-a117-ad63bf3a1d12
-

வேலை­க­ளுக்கு ஏற்ற திற­னு­டன் ஊழி­யர்­கள் இருப்­ப­தை­யும் நடு­வில் வேறு வாழ்க்­கைத்தொழி­லுக்கு மாறு­வோர், தேவைப்­படும் தேர்ச்­சி­களு­டன் தொடர்ந்து வேலைச் சூழ­லுக்கு ஏற்ப பொருத்­த­மான நிலை­யில் இருந்து வரு­வ­தை­யும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக ஒரு புதிய வழி­காட்டித் திட்­டம் தொடங்­கப்­பட்டு இருக்­கிறது.

அந்­தத் திட்­டத்­தின்­படி, வேலை­யி­டத்­தில் ஊழி­யர்­கள் பல ஆற்­றல்­க­ளை­யும் திற­மை­க­ளை­யும் கற்­றுக்­கொள்ள ஏது­வாக பல ஏற்­பாடு­களை நடப்­புக்­குக் கொண்டு வரும் நிறு­வ­னங்­க­ளுக்கு அதிக ஆத­ரவு கிடைக்­க­வி­ருக்­கிறது.

பயிற்சி மற்­றும் பெரி­ய­வர் கல்­வித் துறையை மேம்­ப­டுத்­தும் ஒரு முயற்­சி­யாக சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பெரி­யோர் கற்­றல் பயி­ல­கம் அந்த ஐந்­தாண்­டுத் திட்­டத்தை நேற்று தொடங்­கி­யது. அதன்­படி இந்த ஆண்­டில் மூன்­றா­வது தேசிய உன்­னத வேலை­யிட கற்­றல் நிலை­யம் திறக்­கப்­படும். அந்த நிலை­யம் நிறு­வ­னங்­களில் ஊழி­யர்­கள் முன்­ன­தா­கவே பல தேர்ச்­சி­க­ளைக் கற்­றுக்­கொள்ள உத­வும்.

வேலை-குழு ஆற்­றல்­களை உரு­வாக்­கி­யும் அந்த நிலை­யம் ஆத­ரவு அளிக்­கும். அது சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு உதவி அந்த நிறு­வ­னங்­கள் கற்­றல் நடை­மு­றை­களை வேலை­யி­டங்­களில் ஒருங்­கி­ணைக்க கைகொ­டுக்­கும். நிறு­வ­னங்­க­ளின் மீள்­தி­றன் பல­ம­டை­ய­வும் அது ஆத­ரவு அளிக்­கும்.

முதியோர் கற்­றல் பயி­ல­கம் ஆயுள்­கா­லம் மற்­றும் வேலை­யிட கற்­றல் தொடர்­பான ஆய்­வு­களை நடத்தி மின்­னி­லக்­கப் புத்­தாக்­கத்­தில் அவற்­றின் தாக்கத்தைத் தீர்­மா­னிக்­கும்.

கற்­ற­லி­லும் வேலை நிய­ம­னங்­களி­லும் உல­க­ம­யம் மற்­றும் தொழில்­நுட்­பத்­தின் தாக்­கம் எந்த அள­வுக்கு இருக்கு என்­ப­தை­யும் அது ஆரா­யும். கல்வி துணை அமைச்­சர் கான் சியாவ் ஹுவாங் நேற்று புதிய வழி­காட்­டித் திட்­டத்­தைத் தொடங்கி­வைத்­தார்.

"அடுத்த ஐந்­தாண்­டிற்குத் துடிப்பு­மிக்­கத் திட்­டம் தொடங்­கப்­பட்டு இருக்­கிறது. பயிற்சி மற்­றும் முதியோர் கல்­வித்­துறை உரு­மாற்­றம் அடை­வ­தற்குத் தலை­மை­தாங்கி இந்­தப் பயி­ல­கம் அடுத்த சுற்று ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் இயக்­கத்­துக்கு ஆத­ரவு அளிக்­கும்," என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.