சுடச் சுடச் செய்திகள்

முரண்பாடுகள் ஆராயப்படுகின்றன ‘ரெம்டெசிவிர்’ சிகிச்சைமுறை தொடர்கிறது

கொரோனா கிரு­மித்­தொற்று சிகிச்­சைக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்டு வரும் ‘ரெம்­டெ­சி­விர்’ மருந்து தொடர்­பி­லான அண்­மைய முரண்­பட்ட கண்­டு­பி­டிப்­பு­களை தொற்­று­நோய்­க­ளுக்­கான தேசிய நிலை­யம் (என்­சி­ஐடி) தீவி­ர­மாக ஆராய்ந்து வந்­தா­லும் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­குத் தொடர்ந்து அம்­ம­ருந்து ஒரு சிகிச்சை முறை­யாக இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உலக சுகா­தார நிறு­வ­னம் சென்ற வாரம் அதன் ‘சோலி­டே­ரிட்டி’ சோத­னை­யின் இடைக்­கால முடி­வு­களை வெளி­யிட்­டி­ருந்­தது. கொவிட்-19 நோயா­ளி­கள் மருத்­து­வ­ம­னை­யில் எவ்­வ­ளவு காலம் இருப்­பார்­கள், அவர்­கள் பிழைப்­பது எந்த அளவு சாத்­தியம் ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் ‘ரெம்­டெ­சி­விர்’ மருந்து எவ்­வி­தத் தாக்­கத்­தை­யும் ஏற்­ப­டுத்­த­வில்லை என்று அதில் கூறப்­பட்­டி­ருந்­தது.

இதை­ய­டுத்து அமெ­ரிக்க தேசிய சுகா­தா­ரக் கழ­கங்­க­ளின் கொவிட்-19 சிகிச்­சை­முறை சோதனை முடி­வு­க­ளை­யும் என்­சி­ஐ­டி­யின் கொவிட்-19 சிகிச்­சை­முறை பணிக்­குழு, ஆராய்ந்து வரு­கிறது. மருத்­து­வச் சோத­னை­கள் தவிர வேறு கார­ணங்­க­ளுக்­கா­க­வும் ‘ரெம்­டெ­சி­விர்’ மருந்­தைப் பயன்­ப­டுத்த, சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் ஜூன் மாதத்­தில் நிபந்­த­னை­யு­டன் ஒப்­பு­தல் வழங்கி­ இ­ருந்­தது.

இந்­நி­லை­யில், சிங்­கப்­பூ­ரில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட தற்­போதைய சிகிச்சை முறை­யில் மாற்­றம் இல்லை. குறைந்த பிரா­ண­வாயு செறிவு நிலை, கூடு­தல் பிரா­ண­வாயு தேவைப்­படும் நிலை போன்ற நோயா­ளி­க­ளுக்­குத் தொற்­று­நோய் நிபு­ணர்­கள் ‘ரெம்­டெ­சி­விர்’ மருந்­தைச் செலுத்த அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் கண்­டு­பி­டிப்­பு­கள் சீராக இல்லை என்­றும் வேறு ஆய்­வு­கள் ‘ரெம்­டெ­சி­விர்’ மருந்­தின் பலன்­களை உறு­தி­செய்­துள்­ளன என்­றும் மருந்தை உரு­வாக்­கிய ஜிலிட் நிறு­வ­னம் கூறி­யுள்­ளது. இருப்­பி­னும், இது நம்­ப­க­மான முடிவே என்­றார் உலக சுகா­தார நிறு­வ­னத்­தால் நிய­மிக்­கப்­பட்ட புள்­ளி­வி­வர நிபு­ணர் டாக்­டர் ரிச்சர்ட் பெட்டோ.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon