‘வேலை வாய்ப்புகளை உருவாக்க உலக நாடுகளுடன் ஒத்துழைப்பு’

நிறு­வ­னங்­கள் வள­ர­வும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­க­வும் உலக நாடு­க­ளு­ட­னான ஒத்­து­ழைப்பை சிங்­கப்­பூர் தொட­ரும் என்று தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் தெரி­வித்து இருக்­கி­றார்.

கொவிட்-19 நெருக்­கடி பொரு­ளி­யல் மந்­த­நி­லையை ஏற்­ப­டுத்தி இருந்­தா­லும், தடை­யற்ற வர்த்­தக உடன்­பா­டு­கள், மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் உடன்­பா­டு­கள் போன்ற வழி­களில் அனைத்­து­லக ஒத்­து­ழைப்பை நாடும் உத்­தியை சிங்­கப்­பூர் விடாப்­பி­டி­யா­கக் கைக்­கொள்ள வேண்­டும் என்று திரு ஈஸ்­வ­ரன் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

“நாம் சவால்­மிக்­க­தொரு பொரு­ளி­யல் சூழ­லில் இருக்­கி­றோம் என்­பது தெள்­ளத்­தெ­ளிவு. இத்­த­கைய சூழ­லில் இருந்து நாம் எப்­படி வெளி­யே­றப் போகி­றோம் என்­பது நமது செயல்­பா­டு­க­ளைப் பொறுத்தே அமை­யும்,” என்றார் அமைச்­சர்.

சிங்­கப்­பூர் தொழில் சம்­மே­ள­னத்­தின் தடை­யற்ற வர்த்­தக உடன்­பாட்டு நாளில் பங்­கேற்று, மெய்­நிகர் முறை­யில் உரை­யாற்­றி­ய­போது அவர் இவ்­வாறு சொன்­னார்.

கொரோனா நெருக்­க­டி­யைக் கார­ண­மா­கச் சொல்லி, தடை­யற்ற வர்த்­த­கத்­தில் இருந்­தும் வெளிப்­ப­டைத் தன்­மை­யு­டைய நாடாக இருப்­ப­தில் இருந்­தும் பின்­வாங்­கு­வது குறு­கிய கால நோக்­கில் சரி­யான செய­லா­கத் தோன்­றக்­கூ­டும் என்­றார் அவர்.

“ஆனால், நீண்­ட­கால நோக்­கில் பார்த்­தால், அப்­ப­டிச் செய்­வது நம்­மு­டைய வளர்ச்சி வாய்ப்­பு­க­ளை­யும் நம் மக்­க­ளின் வாழ்க்­கைத்­த­ரத்தை உயர்த்­து­வ­தை­யும் பெரி­தும் பாதித்­து­வி­டும். சிறிய நாடா­னா­லும் பெரிய நாடா­னா­லும் இது­தான் உண்மை,” என்று வர்த்­தக உற­வு­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான திரு ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

புளூம்­பெர்க் தொலைக்­காட்சிக்கு அளித்த இன்­னொரு நேர்­கா­ண­லின்­போது, வர்த்­தக உற­வு­களை மேலும் மேம்­ப­டுத்­து­வது குறித்து சிங்­கப்­பூர் பல நாடு­க­ளு­டன் பேசி வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

“சிங்­கப்­பூ­ரில் தொழில் செய்ய விரும்­பும் பல பங்­கா­ளி­களை நாம் கண்டு வரு­கி­றோம். சிலர் தங்­க­ளது வட்­டா­ரத் தலை­மை­ய­கங்­க­ளை­யும் இங்கு அமைத்­துள்­ள­னர். நம்­மு­டைய தடை­யற்ற வர்த்­தக உடன்­பா­டு­க­ளின் ஒட்­டு­மொத்த விளை­வு­க­ளால் இது சாத்­தி­ய­மா­னது,” என்­றார் அமைச்­சர்.

மின்­னி­லக்­கப் பொரு­ளி­யலை மைய­மா­கக் கொண்ட உடன்­பா­டு­கள் உள்­ளிட்ட இரு­த­ரப்பு உடன்­பா­டு­கள் குறித்த பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தும் அதே­வே­ளை­யில், வட்­டார முழு­மை­யான பொரு­ளி­யல் பங்­கா­ளித்­து­வம், பொருட்­கள் தொடர்­பான ஆசி­யான் ஒப்­பந்­தம் ஆகி­ய­வற்­றி­லும் சிங்­கப்­பூர் கவ­னம் செலுத்­து­கிறது. தற்­போ­துள்ள உலக வர்த்­தக சங்­கி­லி­த் தொடரை வர்த்­த­கங்­கள் கிள்­ளுக்­கீ­ரை­யாக எடுத்­துக்­கொள்­ளக்­கூ­டாது. புதிய சந்­தை­க­ளி­லும் பன்­முக சந்­தை­க­ளி­லும் வாய்ப்­பு­க­ளைப் பெற நாம் அனைத்­து­லக மய­மாக வேண்­டும் என்­று திரு எஸ். ஈஸ்வரன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!