குடித்துவிட்டு பொது இடத்தில் குந்தகம் - ஆடவர் கைது

குடித்துவிட்டு பொது இடத்தில் குந்தகம் - ஆடவர் கைது

1 mins read
f8dcb3e8-4b51-41f6-9e1f-7dd655330c1d
-

மதுபானம் அதிகமாக குடித்துவிட்டு பொது இடத்தில் பிறருக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த 51 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். தானியக்க வங்கி இயந்திரம் ஒன்றை குப்பைத்தொட்டியால் அவர் இடித்ததைக் காட்டும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இந்தச் சம்பவம் அக்டோபர் 19ஆம் தேதியன்று இரவு நேரத்தில் புளோக் 128 லோரோங் தோபாயோவில் நடந்தது.குடிபோதையில் மஞ்சள் நிறக் குப்பைத் தொட்டியின் மேற்பகுதியை எடுத்து இயந்திரத்தை இடித்துக்கொண்டிருந்தபோது மற்றொரு வழிப்போக்கர் அவ்வழியே வந்து அவரைத் தடுக்க முயன்றதையும் அந்தக் காணொளி காட்டியது. அவ்வாறு அணுகிய அந்த வழிப்போக்கரை குடிபோதையில் இருந்த ஆடவர் பல்வேறு ஆபாச வார்த்தைகளால் திட்டியதும் காணொளியில் பதிவானது

போதையால் மனம் பேதலித்த அந்த ஆடவருக்கு உதவ மட்டும் விரும்பியதாக ஷின் மின் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

உதவிக்கான அழைப்பு இரவு 9.37 மணிக்குக் கிடைத்ததாகத் தெரிவித்த போலிசார், குடிபோதையில் பொது இடத்தில் பிறருக்குத் தொல்லை விளைவித்ததால் அந்த 51 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாகக் கூறினர்.