மூலாதார பணவீக்கம் செப்டம்பரில் குறைந்தது: ஏறக்குறைய பூஜ்ஜியம்

சிங்கப்பூரில் மூலாதார பணவீக்கம் சென்ற செப்டம்பர் மாதம் மேலும் குறைந்தது. அதேவேளையில், ஒட்டுமொத்த பணவீக்கம் பூஜ்ஜியத்தை நெருங்கியதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக தொழில் அமைச்சும் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குடியிருப்பு, தனியார் சாலை போக்குவரத்துச் செலவுகளை நீக்கி விட்டு கணக்கிடப்படும் மூலாதார  பணவீக்கம் செப்டம்பரில் -0.1% ஆக இருந்தது. இது முந்தைய மாதத்தில் -0.3% ஆக இருந்தது. 

சேவைகள், மின்சாரம், எரிவாயு செலவு கொஞ்சம் குறைந்ததே  இதற்கு முக்கியமான காரணம். சென்ற ஆண்டு எட்டுமாத அளவுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் தொடர்ந்து எட்டாவது மாதமாக மூலாதார பணவீக்கம் குறைந்து வந்தது. இருந்தாலும் ஆகஸ்ட் மாத அளவைவிட அது செப்டம்பரில் கூடியது. ஒட்டுமொத்த பணவீக்கம் ஆகஸ்டில் -0.4% ஆக இருந்தது. இது செப்டம்பரில் 0% ஆக நிலவியது.

தனியார் போக்குவரத்துச் செலவில் படிப்படியாக அதிக குறைவு இடம்பெற்றதே இதற்கு பெரிதும் காரணம் என்று தெரியவந்தது. மூலாதார மற்றும் ஒட்டுமொத்த பணவீக்கம் 2020ல் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை  இந்த ஆணையம் சென்ற வாரம் கணித்து இருந்தது.  அதன்படி இந்த பணவீக்கம் -(மைனஸ்) முதல் -0.5%லிருந்து 0% வரை இருக்கும் என்று அது தெரிவித்தது. மூலாதார பணவீக்கம் அடுத்த ஆண்டில் 0% முதல் 1% வரை இருக்கும் என்றும்  ஒட்டு மொத்த பணவீக்கம் -0.5%க்கும் 0.5%க்கும் இடைப்பட்டு இருக்கும் என்று ஆணையம் முன்னுரைத்து இருக்கிறது. 

ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் தனியார் போக்குவரத்துச் செலவு சென்ற மாதம் 0.1% குறைந்தது. அதேபோல் மின்சாரம், எரிவாயுச் செலவு சென்ற மாதம் மெதுவான விகிதத்தில் குறைந்தது. ஆகஸ்டில் இந்தக் குறைவு -14.6% ஆக இருந்தது. செப்டம்பரில் இது -14.2% குறைந்தது.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon