போலிசுக்கு கையூட்டு கொடுக்க முயன்றவருக்கு 4 வார சிறை

போலிசுக்கு கையூட்டு கொடுக்க முயன்றவருக்கு 4 வார சிறை

1 mins read
3bfcc7ef-53a7-4ccd-9b8b-522a0492dec3
-

கொவிட்-19 அமலாக்க நடவடிக்கையைத் தவிர்க்க போலிஸ்காரக்கு கையூட்டு வழங்க முயன்ற 28 வயது சென் லோங் என்பவருக்கு நான்கு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 7ஆம் தேதி பூன் லே ரயில் நிலையத்தின் புகை பிடிக்கும் பகுதியில் சீன நாட்டவரான செங், முகக் கவசம் அணியாமல் நின்றிருந்ததை பொதுப் போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவின் போலிஸ் அதிகாரிகள் கண்டனர். அவர்கள் சென்னை அணுகி, முகக்கவசத்தை முறையாக அணியுமாறு கூறினர். அப்போது அவர் அணிந்துகொண்டாலும், பிறகு பலமுறை முகக்கவசமின்றித் தென்பட்டார். வொர்க் பர்மிட்டில் பணிபுரியும் செங்கை அதிகாரி சான் ஹுய் ஷி விசாரணை செய்தார். அப்போது, அவர் $50.00 கையூட்டு வழங்க முயற்சி செய்தார். அதை வாங்க மறுத்த அதிகாரி, சென்னுக்கு கொவிட்-19 (தற்காலிக) சட்டத்தின் கீழ் அவருக்கு $300 வெள்ளி அபராதம் விதித்தார்.

இச்சம்பவம் குறித்து பின்னர் லஞ்ச ஊழல் தடுப்பு விசாரணை இலாகாவிடம் புகார் செய்யப்பட்டது. கையூட்டு வழங்க முயன்றதற்கு அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறையோ 100,000 வெள்ளி வரை அபராதமோ இரண்டுமோ விதிக்கப்பட்டிருக்கலாம்.