2018ல் அறப்பணி நன்கொடை $2.9 பில்லியன்

சிங்­கப்­பூ­ரில் அறப்­பணி அமைப்பு­களுக்­கான நன்­கொடை 2018ல் $2.9 பில்­லி­ய­னாக இருந்­தது. இது 10 ஆண்­டு­களில் ஆக அதி­க­மா­ன­தா­கும். இருந்­தா­லும் கொவிட்-19 கார­ண­மாக இந்த ஆண்­டில் நன்­கொ­டை­கள் குறை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அறப்­ப­ணி­க­ளுக்­கான நன்­கொடை 2017ல் $2.7 பில்­லி­ய­னாக இருந்­தது. அது 2018ல் 8% கூடி $2.9 பில்­லி­ய­னா­கக் கூடி­யது என்று அண்­மை­யில் வெளி­யி­டப்­பட்ட அறப்­பணி ஆணை­யர் 2019 ஆண்­ட­றிக்கை தெரி­விக்­கிறது.

2018ல் பெறப்­பட்ட நன்­கொடை தொகை 10 ஆண்­டு­க­ளி­லேயே ஆக அதி­க­மா­னது என்­றும் 2009ல் திரண்ட $1.8 பில்­லி­ய­னை­விட அது சுமார் 60 விழுக்­காடு அதிகம் என்­றும் ஆணை­யர் ஆங் ஹாக் செங் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­துள்ளது.

கல்வி, சம­யம், சமூ­கம், நல்­வாழ்­வுத் துறை­களில் நன்­கொ­டை­கள் பெரி­தும் அதி­க­ரித்­தன. இத­னால் 2018ல் சாதனை அள­வுக்கு கொடை திரண்­டது என்று டாக்­டர் ஆங் விளக்­கி­னார்.

சிங்­கப்­பூ­ரில் சென்ற ஆண்டு டிசம்­பர் நில­வ­ரப்­படி பதிவு பெற்ற 2,281 அறப்­பணி அமைப்­பு­கள் செயல்­பட்­டன என்­பது ஆணை­யரின் அறிக்கை மூலம் தெரி­ய­வரு­கிறது.

2019ல் புதி­தாக 21 அமைப்­பு­கள் மட்­டுமே பதி­யப்­பட்­டன. இந்த எண்­ணிக்கை 2018ல் 40 ஆக­வும் 2017ல் 39 ஆக­வும் இருந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!