2018 பிசா ஆய்வு: அனைத்துலகத் திறனில் சிங்கப்பூர் மாணவர்களுக்கே முதல் இடம்

அனைத்­து­லக கலா­சா­ரம், உல­க­ளா­விய விவ­கா­ரங்­கள் ஆகி­ய­வற்­றைப் புரிந்­து­கொண்டு செயல்­படும் திற­னைச் சோதித்­துப் பார்த்த அனைத்­து­ல­கத் தேர்வு ஒன்­றில் சிங்­கப்­பூ­ரின் 15 வயது மாண­வர்­களே முத­லி­டத்­தில் வந்­த­னர்.

2018ஆம் ஆண்­டில் நடத்­தப்­பட்ட இத்­தேர்­வின் முடி­வு­களை பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு, வளர்ச்சி நிறு­வ­னம் (ஓஇ­சிடி) நேற்று அறி­வித்­தது.

‘பிசா’ எனப்­படும் அனைத்­து­லக மாண­வர் மதிப்­பீட்­டுத் திட்­டத்­தின் ஓர் அங்­க­மாக இடம்­பெற்ற ‘உல­க­ளா­விய திறன்’ தேர்­வில் சிங்­கப்­பூர் மாண­வர்­க­ளுக்­குச் சரா­ச­ரி­யாக 576 மதிப்­பெண்­கள் கிடைத்­தன.

இரண்­டா­வது நிலை­யில் வந்த கன­டிய மாண­வர்­க­ளுக்கு 554 மதிப்­பெண்­களும் மூன்­றா­வது நிலை­யில் வந்த ஹாங்­காங் மாண­வர்­க­ளுக்கு 542 மதிப்­பெண்­களும் கிடைத்­திருந்­தன.

இந்­தத் தேர்­வில் பங்­கேற்ற சிங்­கப்­பூர் மாண­வர்­களில் 46 விழுக்­காட்­டி­னர், மிகச் சிறந்த உல­க­ளா­விய திறன் தேர்ச்சி நிலை என்று கரு­தப்­படும் நான்கு அல்­லது ஐந்­தாம் நிலை­யைப் பெற்­றி­ருந்­த­னர்.

மதிப்­பீட்­டில் பங்­கேற்ற 27 நாடு­களின் கல்வி அமைப்­பு­களில் சரா­சரி­யாக 14 விழுக்­காட்­டி­னர் நான்­காம், ஐந்­தாம் நிலை­களில் தேறி­யி­ருந்­த­னர்.

வெவ்­வேறு கண்­ணோட்­டங்­களி­லி­ருந்து பகுப்­பாய்வு செய்­வது, தக­வலை மதிப்­பிட்டு வேறு­ப­டுத்­திக் காண்­பது போன்ற அம்­சங்­களில் சிங்­கப்­பூர் மாண­வர்­கள் அதி­கத் திறன் பெற்­றுள்­ள­னர் என்­பதை இந்த முடி­வு­கள் காட்­டு­வ­தாக கல்வி அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

2018 ‘பிசா’ ஆய்வு

இதற்­கி­டையே உல­க­ளா­விய விவ­கா­ரங்­கள் குறித்து சிங்­கப்­பூர் மாண­வர்­கள் அதி­கம் அறிந்­தி­ருந்­தா­லும் உலக சச்­ச­ர­வு­கள் மற்­றும் பொரு­ளி­யல் குறித்து அதி­கம் அறிந்­தி­ருக்­க­வில்லை என்று ‘2018 பிசா ஆய்வு’ தெரி­வித்­துள்­ளது.

கிட்­டத்­தட்ட 6,670 மாண­வர்­கள் இந்த ஆய்­வில் பங்­கேற்­ற­னர். பத்­தில் எட்டு சிங்­கப்­பூர் மாண­வர்­கள், தங்­க­ளால் உல­க­ளா­விய பரு­வ­நிலை மாற்­றம், உலக வெப்­ப­ம­ய­மா­தல் போன்ற விவ­கா­ரங்­கள் குறித்து நம்­பிக்­கை­யு­டன் விளக்க முடி­யும் என்று தெரி­வித்­த­னர்.

இது ஓஇ­சி­டி­யின் சரா­ச­ரி­யான 6, 7 மாண­வர்­க­ளை­விட அதி­கமே.

இருப்­பி­னும், அனைத்­து­லக ரீதி­யில் நடந்து வரும் மோதல்­கள், கொள்­ளை­நோய்­கள், பொரு­ளி­யல் போன்ற விவ­கா­ரங்­கள் தொடர்­பில் சிங்­கப்­பூர் மாண­வர்­க­ளி­டம் அந்த அளவு தன்­னம்­பிக்கை இல்லை.

உதா­ர­ணத்­திற்கு, துணி­க­ளின் விலை­யை­யும் அத்­து­ணி­க­ளைச் செய்­யும் நாடு­களில் உள்ள வேலைச் சூழல்­க­ளை­யும் 50 விழுக்­காட்­டி­ன­ரால் மட்­டுமே தொடர்­பு­ப­டுத்­திப் பார்க்க முடிந்­தது. இது ஓஇ­சி­டி­யின் சரா­சரி விகி­த­மான 58 விழுக்­காட்­டைக் காட்­டி­லும் குறைவு.

புதிய சூழல்­கள் அல்­லது சவால்­க­ளுக்கு ஏற்­பத் தங்­களை மாற்­றிக்­கொள்­வது தொடர்­பில் 50 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே முடி­யும் என்­ற­னர். ஓஇ­சி­டி­யின் சரா­சரி விகி­தம் 59%.

புதிய, சவால்­மிக்க சூழல்­களுக்கு ஏற்ப மாறிக்­கொள்­ளும் தன்மை பெற்ற மாண­வர்­க­ளி­டம் கூடு­தல் மீள்­தி­றன் அமைந்­தி­ருக்­கும் என்று கல்வி அமைச்சு ‘பிசா 2018’ ஆய்வை மேற்­கோள் காட்­டி­யது. மாண­வர்­கள் பரந்த முறை­யில் கல்வி கற்­ப­தைத் தொடர்ந்து ஊக்கு­விக்­கும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!