அனைத்துலகப் பயணங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய கொவிட்-19 'தடுப்பூசி மருந்து கடப்பிதழ்' திட்டம் குறித்து சிங்கப்பூர் உட்பட பல நாடுகள் பரிசீலித்து வருகின்றன. இத்திட்டப்படி உருவாக்கப்படும் ஓர் உலகளாவிய மதிப்பீட்டுக் கட்டமைப்பின்கீழ் வெளிநாட்டுப் பயணங்கள் அனுமதிக்கப்படும். இருப்பினும், கொரோனா கிருமி அண்மையில் புதிதாக உருவாகிய ஒன்று என்பதால் இத்திட்டம் சாத்தியமாக இன்னும் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுவதாகக் கூறப்பட்டது. தற்போது 'மஞ்சள் காய்ச்சல்' தடுப்பூசி மருந்துக்கான சான்றளிப்பு ஒன்றே உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்தத் தடுப்பூசி வாழ்நாள் எதிர்ப்புச் சக்தியைத் தருவதாகத் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹோக் பொதுச் சுகாதார பள்ளி ஏற்பாடு செய்த இணையக் கருத்தரங்கில் இது குறித்துப் பேசப்பட்டது.
வெளிநாட்டுப் பயணங்களுக்கு பயன்படுத்த கொவிட்-19 'தடுப்பூசி மருந்து கடப்பிதழ்' திட்டம் சாத்தியமாகலாம்
1 mins read
படம்: ராய்ட்டர்ஸ் -

