மரின் பரேடில் உள்ள புளோக் 13 மரின் டெரசுக்கு அருகே கைகலப்பு நிகழ்ந்ததை அடுத்து 32 முதல் 55 வரை வயதுள்ள மூன்று மாதர்கள் கைதாகி இருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பில் 14 மற்றும் 15 வயதுள்ள இரு பதின்ம வயது பெண்களும் 38 வயது ஆடவரும் விசா ரிக்கப்பட்டு வருகிறார்கள்.
சம்பவ இடத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 1.45க்கு மொத்தம் 11 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்ததையும் தொடர்ந்து அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டதையும் பார்த்ததை அடுத்து தாங்கள் நடவடிக்கை எடுத்ததாக போலிஸ் தெரிவித்தது.

