470,000 பேருக்கு $810 மி. மதிப்பில் வேலைநலன் சிறப்புத் தொகை

கிட்­டத்­தட்ட 470,000 ஊழி­யர்­க­ளுக்கு இம்­மா­தம் $810 மில்­லி­யன் மதிப்­பி­ல் வேலை­ந­லன் சிறப்­புத் தொகை வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக நிதி அமைச்சு நேற்று தெரி­வித்­தது. வேலை­ந­லன் துணை வரு­மா­னத் திட்­டத்­தின்­கீழ் குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு அக்­டோ­ப­ரில் இத்­தொகை கிடைக்­க­வுள்­ள­தாக அமைச்சு கூறி­யது.

இம்­மா­தம் 28ஆம் தேதி­யி­லி­ருந்து வழங்­கு­தொ­கையை இந்­தக் குறைந்த வரு­மான சிங்­கப்­பூ­ரர் ஊழி­யர்­கள் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

இவர்­களில் பெரும்­பா­லா­னோர் முன்­னரே வேலை­ந­லன் சிறப்­புத் தொகைக்­குத் தகு­தி­பெற்றவர்கள்.

அதன்­படி 2019ஆம் ஆண்­டில் செய்­தி­ருந்த வேலைக்­காக இவ்­வாண்டு ஜூலை­யில் அவர்­க­ளுக்கு முதல் வழங்­கு­தொ­கை­யான $1500 கிடைத்­தி­ருக்­கும். இறுதி வழங்­கு­இத்தொ­கை­யான மேலும் $1500ஐ அவர்­கள் இம்­மா­தம் பெற­வுள்­ள­னர்.

இத்தொகை அவர்­க­ளின் வங்­கிக் கணக்­கில் போடப்­படும், அல்­லது அவர்­க­ளின் வீட்டு முக­வ­ரிக்கு நவம்­பர் 15ஆம் தேதிக்­குள் காசோ­லை­யாக அனுப்­பப்­படும். 2007ஆம் ஆண்­டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட வேலை­ந­லன் ஒரு நிரந்­த­ரத் திட்­ட­மா­கும். குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளத்தை அதி­க­ரிக்­கும் வகை­யில் நிரப்­புத்­தொகை செலுத்­தப்­ப­டு­கிறது. இது அவர்­க­ளின் ஓய்­வுக்­கா­லத்­திற்­குச் சேமிக்க உத­வும் என்று கூறப்­பட்­டது.

துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான ஹெங் சுவீ கியட், ஆகஸ்ட் 17ஆம் தேதி­யன்று அறி­வித்த தமது அமைச்­சு­நிலை அறிக்­கை­யில், வேலை­ந­லன் துணை வரு­மா­னத் திட்­டத்­திற்கு மேலும் 70,000 ஊழி­யர்­கள் தகு­தி­பெ­று­வர் என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

வேலை­ந­லன் சிறப்­புத் தொகை பெறாத நிலை­யில், இவர்­கள் 2020ஆம் ஆண்­டில் செய்த வேலைக்­காக வேலை­ந­லன் துணை வரு­மா­னத் திட்­டத்­தின்­கீழ் சேர்க்­கப்­ப­டு­வர் என்று அவர் கூறி­யி­ருந்­தார்.

அறி­மு­கம் கண்­ட­தி­லி­ருந்து வழங்­கப்­பட்ட வேலை­ந­லன் வழங்­கு­தொ­கை­யின் மதிப்பு $6.8 பில்­லி­ய­னாகி உள்­ளது. இது­வரை 890,000 பேர் இத்­திட்­டம் வழி பல­ன­டைந்­துள்­ள­னர். ஊழி­ய­ர­ணி­யின் ஆகக் குறை­வான வரு­மா­னம் ஈட்­டும் 20 விழுக்­காட்­டி­ன­ராக உள்ள சிங்­கப்­பூ­ரர் ஊழி­யர்­க­ளுக்­குப் பல­ன­ளிக்க இத்­திட்­டம் தொடங்­கப்­பட்­டது.

இதன் தொடர்­பில், திரு ஹெங் தம் ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்­டி­ருந்­தார். குறைந்த வரு­மான ஊழி­யர்­களை உயர்த்­தும் முக்­கிய கொள்கை புத்­தாக்­கங்­களில் வேலை­ந­லன் திட்­ட­மும் படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள முறை­யும் அடங்­கும் என்­றார் அவர்.

உட­னடி மற்­றும் ஓய்­வுக்­கா­லத் தேவை­க­ளுக்கு மத்­திய சேம­நிதி நிரப்­புத் தொகை­யும் ரொக்­க­மான வழங்­கு­தொ­கை­யும் அளிக்­கப்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார். கொள்­ளை­நோய் சூழ­லில் இவர்­க­ளுக்கு மேலும் உதவி நல்க பல திட்­டங்­கள் உள்­ள­தென அவர் கூறி­னார்.

“சிங்­கப்­பூ­ரர்­கள், குறிப்­பாக குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளுக்­கும் நம்­மி­டையே உள்ள எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டிய பிரி­வி­ன­ருக்­கும் இந்த நெருக்­கடி காலத்­தில் உத­வு­வ­தில் அர­சாங்­கம் கடப்­பாடு கொண்­டுள்­ளது,” என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!