லிட்­டில் இந்­தி­யா­வில் ரிக்‌ஷா உலாவுடன் தீபாவளிக் கொண்டாட்டம்

லிட்­டில் இந்­தி­யா­வில் ரிக்‌ஷா உலாவுடன் தீபாவளிக் கொண்டாட்டம்

1 mins read
e7a6ba1a-e8ba-4da2-9ce6-9c8cab229fc3
லிட்டில் இந்தியாவில் வெள்ளிக்கிழமை மாலைகளில் ரிக்‌ஷா சவாரி செய்ய இந்திய மரபுடைமை நிலையம் ஏற்பாடு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

லிட்­டில் இந்­தி­யா­வில் இந்த ஆண்டு தீபா­வ­ளிக் கொண்­டாட்­டத்­தில் சைக்­கிள் ரிக்‌ஷா சுற்­று­லா­வும் இடம்பெறு­கிறது.

நவம்­பர் 13 ஆம் தேதி வரை ஒவ்­வொரு வெள்­ளிக்­கி­ழ­மை­யும், கேம்­பல் லேனில் உள்ள இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தி­லி­ருந்து ரிக்­‌ஷாக்­கள் உலாவைத் தொடங்கும். ­

அப்­துல் கபூர் மசூதி, ஸ்ரீ வீர­மா­கா­ளி­யம்­மன் கோயில் போன்ற முக்­கிய இடங்­களை இந்த உலா­வில் கண்டு ரசிக்­க­லாம்.

அக்­டோ­பர் 16ஆம் தேதி தொடங்­கிய இந்த ரிக்‌ஷா சவா­ரியை இந்­திய மர­பு­டைமை மையம் ஏற்­பாடு செய்­துள்­ளது. மாலை 6 மணி முதல் இரவு 7.45 மணி வரை ரிக்‌ஷா பய­ணம் இடம்­பெ­றும்.

ஒவ்­வொரு சவா­ரி­யும் 15 நிமி­டங்­கள் நீடிக்­கும். ஒரு ரிக்­‌ஷா­வில் இரண்டு பய­ணி­கள் மட்­டுமே அமரலாம்.

ரிக்‌ஷா சவா­ரிக்­கு https://ihc-programmes.peatix.com/view இணையதளத்தில் பதிவு செய்லாம்.