மரண தண்டனை நடைமுறை: மேல்முறையீட்டுக்கு அனுமதி

மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்­றும் நடை­மு­றை­யில், மரண தண்­ட­னைக் கைதி­கள் சம­மாக நடத்­தப்­ப­டு­வ­தில்லை என்று தனது வழக்கை வாதி­டு­வ­தற்­காக, போதைப்­பொ­ருள் கடத்­த­லில் ஈடு­பட்ட சையத் சுஹைல் சையத் ஜின் என்ற 44 வயது கைதிக்கு மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் நேற்று அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

தனக்குமுன் தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு முன்­ன­தாக, தனக்கு மரண தண்­டனை நிறை­வேற்ற சிங்­கப்­பூர் சிறைச்­சா­லைத் துறை எடுத்த முடிவை நீதித்­துறை மறு­ஆய்வு செய்ய வேண்­டும் என்று சுஹைல் சீராய்வு மனுத்­தாக்­கல் செய்­துள்­ளார்.

இது அர­சி­ய­ல­மைப்­பில் அனை­வ­ரும் சம­மாக நடத்­தப்­பட வேண்­டும் என்ற கோட்­பாட்­டுக்கு எதி­ராக உள்­ளது என்று அவர் கூறி­யுள்­ளார்.

சுஹை­லுக்கு முன்­ன­தா­கவே 2015ல் தட்­சி­ணா­மூர்த்தி என்­பவ­ருக்கு மரண தண்­டனை விதிக்கப்­பட்­ட­ தாக சுஹை­லின் வழக்­க­றி­ஞர் திரு எம். ரவி மனு­வில் சுட்­டி­யிருந்­தார். அதில் தட்­சி­ணா­மூர்த்­தி­யின் கைதி எண் 944 என்­றும் சுஹை­லின் கைதி 949 என்­றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இந்த மனு­வைப் பரி­சீ­லித்த தலைமை நீதி­பதி சுந்­த­ரேஷ் மேனன் தலை­மை­யி­லான மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்ற அமர்வு, உள்­துறை அமைச்சு தாக்­கல் செய்­த உறுதி மொழிப் பத்­தி­ரத்­தில் உள்ள விவ­ரங்­க­ளுக்­கும் மனு­வில் காணப்­படும் விவ­ரங்­க­ளுக்­கும் இடையே முரண்­பாடு இருப்­ப­தா­கக் கூறி­யது. அத­னால் மேல்­முறை­யீட்டு மனு விசா­ர­ணைக்கு ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கக் கூறி­யது.

அமைச்சு தாக்­கல் செய்த மனு­வில் சுஹை­லின் மரண தண்டனையை 2020 செப்­டம்­பர் 18ஆம் தேதி நிறை­வேற்­றக் குறிப்­பி­டப்­பட்­ட­போது, மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்ட கைதி­க­ளி­லேயே அவர்­தான் முத­லா­ம­வர் என்று குறிக் ­கப்­பட்­டி­ருந்­தது. திரு ரவி, தட்­சி­ணா­மூர்த்­தி­யின் வழக்கை மேற்­கோள்காட்­டிய பின்­னர், அரசு வழக்­ க­றி­ஞர் பிரான்­சிஸ் இங், மேலும் ஓர் உறுதிமொழிப் பத்­தி­ரத்தை தாக்­கல் செய்ய கால அவ­கா­சம் கோரி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!