சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூரில் மேலும் 14 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் 2 சம்பவங்கள்

சிங்கப்பூரில் இன்று (அக்டோபர் 24) நண்பகல் நிலவரப்படி புதிதாக 14 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,965 ஆகியுள்ளது.

இன்று பதிவான தொற்றுச் சம்பவங்களில் இரண்டு உள்ளூர் சம்பவத்திலும் ஒன்று விடுதிவாசிக்கும் கண்டுபிடிக்கப்பட்டது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 11 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். 

நேற்று பதிவான 10 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

அவர்கள் பங்ளாதேஷ், பிரான்ஸ், பிலிப்பீன்ஸ், ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வத்தவர்கள்.

அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர், அறுவர் வேலை அனுமதி அட்டை உடையவர்கள், இருவர் சார்ந்திருப்போர் அட்டையில் இருப்பவர்கள்; மற்றவர் மாணவர் அனுமதி அட்டை வைத்திருப்பவர்.

இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 28 பேர் உயிரிழந்தனர்.

அனைத்துலக அளவில் 41.6 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1.1 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon