தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹவ்காங் அவென்யூ 1 புளோக் 174D வாசிகளுக்கு காசநோய் சோதனை

2 mins read
4283a270-b109-4209-a548-07cea83e06c6
படம்: SCREENGRAB FROM GOOGLE MAPS -

ஹவ்­காங் அவென்யூ1ல் உள்ள புளோக் 174D-ல் இப்­போது வசிப்­பவர்­களும் முன்பு வசித்­த­வர்­களும் காச­நோய் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வாய்ப்பு வழங்­கப்­படும். அங்கு சில­ருக்கு அந்த நோய் ஏற்­பட்­டதை அடுத்து இந்த ஏற்­பாடு செய்­யப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

அந்த புளோக்­கில் நான்கு வீடு­களில் வசிப்­போ­ரில் நான்கு பேருக்கு காச­நோய் ஏற்­பட்­ட­தாக 2018 ஜன­வ­ரிக்­கும் இந்த ஆண்டு ஜூன் மாதத்­திற்­கும் இடை­யில் கண்­ட­றி­யப்­பட்­டது. இத­னை­ய­டுத்து இந்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வடிக்கை இடம்­பெ­று­கிறது.

மோல்­மீன் ரோட்­டில் அமைந்­திருக்­கும் காச­நோய் கட்­டுப்­பாட்டு பிரி­வில் அக்­டோ­பர் 26 முதல் இல­வ­ச­மாக அந்­தச் சோதனை நடத்­தப்­படும்.

இந்நோய் ஏற்­பட்­ட­வர்­க­ளுக்கு உட­னடியா­கச் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. இரு­வ­ருக்கு சிகிச்சை முற்­றி­லும் முடிந்­து­விட்­டது. இதர இரண்டு பேருக்கு இப்­போது சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது. இவர்­க­ளுக்கு இனி தொற்று இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

காச­நோய் ஏற்­பட்டுள்ளோருக்குச் சிகிச்சை தொடங்­கி­விட்­டால் அவர்­க­ளி­டம் இருந்து வேறு யாருக்­கும் கிருமி பர­வாது. ஆகை­யால் அந்த நால்­வ­ருக்­கும் இந்த நோய் ஏற்­பட்­ட­தால் பொது­மக்­க­ளுக்­குச் சுகா­தார ஆபத்து ஏற்­படும் என்­பதற்­கான வாய்ப்பு இல்லை என்று அமைச்சு விளக்­கி­யது.

முன்­னெச்­ச­ரிக்கை உத்­தி­யின் ஒரு பகு­தி­யாக அந்த நால்­வ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள் யார் யார் என்­ப­து கண்­ட­றி­யப்­பட்டு பரி­சோ­த­னைக்­காக அவர்­க­ளு­டன் தொடர்­பு­கொள்­ளப்­பட்டு இருக்­கிறது என்­றும் அமைச்சு கூறி­யது.

அதி­கா­ரி­கள் அந்த புளோக்­கில் உள்ள எல்லா வீடு­க­ளுக்­கும் அக்­டோ­பர் 25 முதல் 27ஆம் தேதி வரை சென்று பரி­சோ­த­னைக்­குச் செல்­லு­மாறு குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு ஊக்­க­மூட்­டு­வார்­கள்.

அந்த புளோக்­கில் இந்த ஆண்டு பிப்­ர­வரி முதல் வசித்து இருப்­ப­வர்­கள் பரி­சோ­தனை செய்­து­கொள்ள விரும்பினால் 6248 4430 என்ற எண் மூலம் தொடர்­பு­கொள்­ள­லாம்.

காச­நோய் என்­பது அந்த தொற்று உள்­ள­வர்­க­ளு­டன் நீண்ட காலத்­திற்கு அணுக்­க­மாக இருப்­ப­வர்­க­ளுக்குப் பர­வக்­கூ­டிய ஒரு நோயா­கும். காச­நோ­யா­ளி­கள் தொடு­கின்ற பொரு­ளையோ, இடத்­தையோ வேறு ஒரு­வர் தொடு­வ­தன் மூலம் இந்த நோய் பர­வாது என்­பதை அமைச்சு சுட்­டி­யது.