தமிழ் மொழியில் நடத்தப்படும் 'மேலும் வலிமை பெற்று எழுவதன் தொடர்பிலான கலந்துரையாடல்'

‘ஒன்­றி­ணைந்த சிங்­கப்­பூர் இயக்­கத்­தின் கீழ் மேலும் வலிமை பெற்று எழு­வ­தன் தொடர்­பி­லான கலந்­து­ரை­யா­டல் தொடர்’ நவம்­பர் 28ஆம் தேதியன்று தமிழ்­மொ­ழி­யில் நடக்­கும் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ நேற்று அறி­வித்­தார்.

மாண்­ட­ரின் மொழி­யில் நேற்று நடந்த மெய்­நி­கர் கலந்­து­ரை­யா­ட­லில் சுகா­தார மூத்த அமைச்­சர் கோ போ கூனு­டன் கலந்­துகொண்டு பேசிய அவர், வரும் மாதங்­களில் மேலும் பல சிங்­கப்­பூ­ரர்­க­ளின் கருத்­து­க­ளைச் செவி­ம­டுக்­கும் வகை­யில் இக்­க­லந்­து­ரை­யா­டல் தமிழ் மொழி­யோடு மலாய் மொழி­யி­லும் நடக்­கும் என்று தெரி­வித்­தார்.

கலந்­து­ரை­யா­டல் ஜூன் மாதத்­தில் தொடங்கி, இது­வரை 11 முறை ஆங்­கில மொழி­யில் நடந்து வந்துள்­ளது. நேற்று மாண்­ட­ரின் மொழி­யில் நடந்த முத­லா­வது நிகழ்ச்­சி­யில் 50 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

மின்­னி­லக்­க­ம­யம், தொழில்­நுட்­பங்­க­ளைத் தழு­வு­தல், சமூக ஆத­ரவு ஆகிய தலைப்­பு­கள் நேற்­றைய கலந்­து­ரை­யா­ட­லில் முக்­கி­ய­மா­கப் பேசப்­பட்­டன. புதிய வழக்­க­நி­லைக்­குத் திரும்­பும் சிங்­கப்­பூர் மேலும் மீள்­தி­றன் பெற்­ற­தாக விளங்க, அர­சாங்­கத்­திற்­கும் பொது­மக்­களுக்கு­மி­டையே அணுக்­க­மான ஒத்­துழைப்பு அவ­சி­யம் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

அர­சாங்­கம் வெவ்­வேறு அம்­சங்­க­ளின் தொடர்­பில் இயங்கி வரும் பணிக்­கு­ழுக்­க­ளு­டன் புத்­தாக்­கத் தீர்­வு­க­ளைப் பற்றி பேசி, அவற்றை உரு­வாக்­கு­வ­தில் இணைந்து செயல்­பட்டு வரு­வ­தாக திரு­வாட்டி ஃபூ தெரி­வித்­தார்.

கொள்ளை நோய் சூழ­லில் மன­நல விவ­கா­ரங்­கள் மேலும் முக்­கியத்­து­வம் பெற்­றுள்­ள­தைச் சுட்­டிய டாக்­டர் கோ, இவ்­வாண்டு பிப்­ர­வரி மாதத்­தில் அமைக்­கப்­பட்ட ‘இளை­யர் மன­ந­லக் கட்­ட­மைப்பை’ உதா­ர­ணம் காட்­டி­னார். இளை­யர்­கள், மன­நல நிபு­ணர்­கள், பெற்­றோர்­கள் ஆகி­யோர் இளை­யர்­க­ளின் மன­நலம் குறித்­துக் கலந்­து­ரை­யாட இக்­கட்­ட­மைப்பு அமைக்­கப்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.

இவ்­வாறு மக்­க­ளின் அக்­க­றை­களை­யும் கேள்­வி­க­ளை­யும் அறிந்து­கொண்டு பின்­னர் ஏற்­பாடு செய்­யப்­படும் கலந்­து­ரை­யா­டல் அமர்­வு­களில் அது குறித்து பேசப்­படும் என்­றார் திரு­வாட்டி ஃபூ.

அடுத்த ஆண்டு பிப்­ர­வரி மாதத்­திற்­குள் குறைந்­தது 20 கலந்­து­ரை­யா­டல் அமர்­வு­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இது­வரை நடந்த அமர்­வு­களில் 1,600க்கும் மேற்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­கள் மற்­றும் சமூ­கப் பங்­கா­ளி­கள் பங்­கேற்று, கொவிட்-19க்குப் பிந்­தைய உல­கில், நாடு எதிர்­நோக்­கக்­கூ­டிய சவால்­க­ளை­யும் வாய்ப்பு­களை­யும் குறித்து உரை­யா­டி­யுள்­ள­னர். நெருக்­க­டி­யி­லி­ருந்து மேலும் வலிமை பெற்று மீண்டு வரு­வ­தற்­கான தீர்­வு­க­ளை­யும் ஆலோ­சித்து உள்­ள­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon