18 பூங்காக்களில் குடும்பத் தோட்டம் அமைக்க 1,000 புதிய இடங்கள்

18 பூங்காக்களில் குடும்பத் தோட்டம் அமைக்க 1,000 புதிய இடங்கள்

1 mins read
39fb91bf-8f7f-4755-bd69-c5f842f6582b
படம்: சாவ்பாவ் -

பொதுப் பூங்­காக்­களில் குடும்­பத் தோட்­டங்­களை அமைக்­கும் திட்­டத்­தின் கீழ், மேலும் 1,000 புதிய இடங்­களை தேசிய பூங்­காக் கழ­கம் ஒதுக்­கித் தர­வுள்­ளது.

அந்த இடங்­கள், பொங்­கோல் வாட்­டர்வே பாய்ண்ட், சுவா சூ காங் பூங்கா, வெஸ்ட் கோஸ்ட் பூங்கா என இங்­குள்ள 18 பூங்­காக்­களில் ஒதுக்­கித் தரப்­படும்.

சிங்­கப்­பூ­ருக்­கான சத்­து­ண­வுத் தேவை­களில் 30 விழுக்­காட்டை 2030ஆம் ஆண்­டுக்­குள் நிறை­வேற்ற விரும்­பும் அர­சாங்­கத்­தின் திட்­டத்­திற்கு இது கைகொ­டுக்­கும் என்­றார் தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ.

"உண­வுப் பாது­காப்பை வலு­வடை­யச் செய்­யும் நம் நாட்­டின் உத்­தி­யில் ஒரு பகுதி இது. மேலும் சமூக மீ்ள்தி­ற­னும் இத­னால் மேம்­படும்," என்­றார் அவர்.

நிலப்­ப­கு­தி­க­ளு­டன் பொது­மக்­க­ளுக்கு சுமார் 60,000 விதை­களை­யும் கழ­கம் வழங்­க­வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.