தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு ஊழியர்களின் மனதை மகிழ்ச்சியாக்க பல வழிகள்

1 mins read
bd1f3b7f-a0c3-4da0-94cb-b9bab132aca8
சுங்கை தெங்கா தங்கும் விடுதியில் ஜூன்-ஜூலை மாதத்தில் உடற்பயிற்சி செய்து காணொளி அனுப்பும் ஒரு போட்டி நடந்தது. அதில் திரு பிரம்மதேவன் தங்கிய அறை முதலாம் பரிசு வென்றது. விடுதியில் உள்ள மளிகைக் கடையில் செலவழிக்க $90 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் அந்த அறையின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன. அந்த ஒரு மாதத்திற்கு மாலை நேரத்தில் சீ 'டாய்ச்சி' தற்காப்புக் கலையை அன்றாடம் ஊழியர்கள் செய்து உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டனர். படம்: பிரம்மதேவன் -
multi-img1 of 2

வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் கலை நிகழ்ச்சிகள்

பைனி­யர் பகு­தி­யில் அமைந்­துள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­கள் நிலை­யத்­தின் விளை­யாட்டு மையத்­தில் நடக்­கும் தீபா­வளி, பொங்­கல் கொண்­டாட்­டங்­களில் 10,000க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­கள் பங்கேற்பர்.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தற்­போ­தைய சூழ­லி­லும் மனம் தள­ரா­மல் இருப்­ப­தற்கு நேரடி காணொளி நிகழ்ச்­சி­களை தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நடத்தி வரு­கிறது இந்த நிலை­யம்.

'கல­கல கொண்­டாட்­டம்' என்ற பெய­ரில் நிக­ழும் இந்த நேரடி காணொ­ளி­களை தொலைக்­காட்சி நடி­க­ரும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் நிலை­யத்­தில் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக பணி­யாற்­றி­யும் வரும் திரு தி.நகு­லன் வழி­ந­டத்து­கி­றார்.

மன­ந­லம் உட்­பட ஊழி­யர்­க­ளுக்கு ஏற்­படும் பிரச்­சி­னை­க­ளைக் கேட்டு உதவ, கிட்­டத்­தட்ட 5,000 அடித்­தளத் தூதர்­கள் இந்­நி­லை­யத்துடன் பணியாற்றுகின்றனர்.

"ஊழி­யர்­க­ளுக்கு முடிந்த உத­வியை நல்­கு­வோம். எங்­க­ளால் முடி­யாதபோது­ அ­திகாரி­க­ளி­டம் பிரச்­சி­னை­களை விளக்கி, தக்க உத­வி­களை அந்த ஊழி­யர்களுக்கு பெற்றுத் தருவோம்," என்­றார் நிலை­யத்­தின் தூத­ரான திரு சங்­க­ர­தே­வன் பாண்­டி­யன், 46.

உதவிக்கு அழைக்க:

(24-hour helpline): 6536-2692

மனிதவள அமைச்சு: 6438 5122

டிடபிள்யூசி2 (TWC2): 6297-7564 / 1800­888-1515

ஹோம் (HOME): 6341-5535

ஹெல்த்சர்வ் (HealthServe): 3138-4443

சிங்கப்பூர் அபய ஆலோசனை சங்கம் (Samaritans of Singapore): 1800-221-4444

மனநலத்திற்கான சிங்கப்பூர் சங்கம் (Singapore Association for Mental Health): 1800-283-7019

மனநல கழகம்: 6389-2222

டிங்கல் பிரண்ட் (Tinkle Friend):1800-274-4788

தேசிய பராமரிப்பு தொடர்பு எண் (National Care Hotline): 1800-202-6868