புருணை இளவரசர் மரணம்: சிங்கப்பூர் தலைவர்கள் இரங்கல்

புரு­ணை­யின் இள­வ­ர­சர் அப்­துல் அலிம் (படம்) நேற்று முன்­தி­னம் மர­ண­முற்­றதை அடுத்து சிங்­கப்­பூர் தலை­வர்­கள் புரு­ணை­யின் மன்­னர் சுல்­தான் ஹச­னல் போல்­கி­யா­வுக்கு நேற்று இரங்­கல் கடி­தங்­கள் அனுப்­பி­னர்.

சுல்­தான் போல்­கி­யா­வுக்கு, சிங்­கப்­பூர் அதி­பர் ஹலிமா யாக்­கோப் அனுப்­பிய இரங்­கல் கடி­தத்­தில், இள­வ­ர­ச­ரின் இழப்பு குறித்து புருணை நாட்டு குடி­மக்­கள் பெரி­தும் கவ­லைப்­ப­டு­வார்­கள் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

"கலை­கள் மீதுள்ள ஆர்­வத்­துக்­கா­க­வும் வசதி குறைந்­த­வர்­கள் மீது அவர் காட்­டிய கரு­ணைக்­கா­க­வும் அவர் என்­றென்­றும் மக்­க­ளின் மனங்­களில் நிலைத்­தி­ருப்­பார்," என்­றும் அதி­பர் ஹலிமா கூறி­னார்.

38 வயது இள­வ­ர­சர் அப்­துல் அலி­மின் மர­ணச் செய்­தியை நேற்று முன்­தி­னம் புரு­ணை­யின் தேசிய ஒலி­ப­ரப்பு நிறு­வ­ன­மான ரேடியோ டெலி­வி­ஷன் புரு­ணை­யும் போர்­னியோ புல்­லட்­டின் செய்­தித்­தா­ளும் வெளி­யிட்­டன.

இள­வ­ர­ச­ரின் மர­ணத்­துக்­கான கார­ணம் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. புருணை தற்­போது ஏழு நாள் துக்­கத்தை அனு­ச­ரிக்­கிறது.

பிர­த­மர் லீ சியன் லூங் தமது இரங்­கல் கடி­தத்­தில், "இள­வ­ர­சர் அப்­துல் அலிம் தமது கனி­வான, தாராள உணர்­வா­லும், அறப்

பணி­க­ளுக்­கும் கல்வி தொடர்­பான நிகழ்­வு­க­ளுக்­கும், இளை­யர் விவ­கா­ரங்­களில் காட்­டிய கடப்­பாட்­டா­லும் பிர­ப­ல­ம­டைந்­தார்.

"இள­வ­ர­ச­ரின் தொடக்­க­நிலை, உயர்­நி­லைக் கல்வி சிங்­கப்­பூ­ரில் இடம்­பெற்­றது குறித்து நாங்­கள் பெரு­மை­ய­டை­கி­றோம். கடந்த பல ஆண்­டு­க­ளாக அவ­ரு­டன் நான் கொண்­டி­ருந்த தொடர்­பு­களில், அவ­ரது பெருங்­கு­ணத்தை நான் அறிந்­து­கொண்­டேன். அவ­ரது மறைவு பேரி­ழப்பு," என்று தெரி­வித்­தார்.

வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ண­னும் சுல்­தான் போல்­கி­யா­வுக்கு இரங்­கல் கடி­தம் அனுப்­பி­னார். அதில், "தம்­மு­டைய இரக்­க குணத்­தால், இள­வ­ர­சர் அப்­துல் அலிம் புருணை நாட்டு மக்­க­ளின் மனதில் நீங்கா இடத்­தைப் பிடித்­து­விட்­டார்," என்று எழு­தி­யி­ருந்­தார்.

இள­வ­ர­சர் அப்­துல் அலிம் நேற்று முன்­தி­னம் புருணை அரச மயா­னத்­தில் அடக்­கம் செய்­யப்­பட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!