உணவுக் கையிருப்பை அதிகப்படுத்துதல்

1 mins read
a35b2cf5-f1d5-4ad5-83fe-8a18f5ea55ea
என்டியுசி ஃபேர்பிரைஸ் பெனோய் விநியோகிப்பு நிலையத்துக்கு நேற்று முன் தினம் வருகை அளித்த வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (வலமிருந்து 2வது) அங்கு உள்ள அதிகாரி யிடம் விளக்கம் பெறுகிறார். படம்: சான் சுன் சிங் ஃபேஸ்புக் -

வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று முன்­தி­னம் ஜூ கூனில் உள்ள என்­டி­யுசி ஃபேர் பிரைஸ் அமைப்­பின் பெனோய் விநி­யோக நிலை­யத்­துக்­கும் கோல்ட் ஸ்‌ட்­ரோ­ரெஜ் அமைப்­பின் உறைய வைக்­கப்­பட்ட இறைச்சி கிடங்­குக்­கும் வருகை அளித்­தார்.

இரு இடங்­க­ளுக்கு தாம் மேற்­கொண்ட வருகை பற்றி நேற்று முன்­தி­னம் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் கருத்­து­ரைத்த அமைச்­சர், "பல்­வ­கைப்­ப­டுத்­து­தல் மற்­றும் மேம்­ ப­டுத்­தப்­பட்ட கையி­ருப்பு ஆகி­ய­வற்­றின் மூலம் சிங்­கப்­பூர் விநி­யோ­கத் தொடரை வலுப்­ப­டுத்த, இரு இடங்­களில் பணி­யாற்­றும் ஊழி­யர்­கள் மிகக் கடு­மை­யாக உழைக்­கி­றார்­கள்," என்­றார்.

"உணவு மற்­றும் அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளின் கையி­ருப்பை அதி­கப்­ப­டுத்த அதி­கா­ரி­களும் ஊழி­யர்­களும் மேற்­கொள்­ளும் முயற்சி­களின் மூலம், கொவிட்-19 கொள்­ளை­நோ­யால் ஏற்­பட்­டுள்ள இடை­யூ­று­கள், உத்­தேச சவால்­க­ளைச் சமா­ளிக்கும் ஆற்றல் நம்மிடம் உள்ளது என்ற நம்­பிக்கை வலுப்­பட்­டுள்­ளது.

"இந்த நம்­பிக்கையின் காரண மாகத்தான் நம்மால் நிம்மதியாக உறங்க முடிகிறது," என்­றும் தெரி­வித்­தார் அமைச்சர் சான்.