‘தமிழ் சோறு போடும்’ பயிலரங்கு

- ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

வகுப்­ப­றைக்கு அப்­பால் தமிழ்­மொழி வாழ்­வா­தா­ரத்­திற்­கும் வழி­காட்­டு­கிறது. இதை உணர்த்­தும் வகை­யில் ‘தமிழ் சோறு போடும்’ எனும் தலைப்­பி­ல் பயி­ல­ரங்­கிற்கு நன்­யாங் தொழில்­நுட்பப் பல்­க­லைக்க­ழகத் தமிழ் இலக்­கிய மன்ற முன்­னாள் மாண­வர் சங்­கம் இம்­மா­தம் 17ஆம் தேதி ஏற்­பா­டு செய்­தி­ருந்­தது. இதில் தமிழ்­மொ­ழி­யைக் கொண்டு படிப்­ப­டி­யாக தங்­க­ளது அர­சாங்­கப் பணி­களில் உயர்ந்த மூன்று பேச்­சா­ளர்­கள் பயி­ல­ரங்­கில் தங்­க­ளது அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

அவர்­களில் ஒரு­வர் உச்ச நீதி­மன்ற இந்­தி­யப் பிரி­வின் தலைமை மொழிபெ­யர்ப்­பா­ளர் திரு­மதி சுப்­பையா ராஜேஸ்­வரி. வழக்­க­றி­ஞர்­கள், நீதி­ப­தி­கள், வழக்­கில் சம்பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ருக்­கி­டையே திறன்­மிக்க தக­வல் பரி­மாற்­றங்­களை உறு­தி­செய்­வது மொழி­பெ­யர்ப்­பா­ளர்­க­ளின் பணி­யா­கும் என்று 49 வயது திரு­மதி ராஜேஸ்­வரி தெரி­வித்­தார்.

மற்­றொரு பேச்­சா­ள­ரான 41 வயது திரு­மதி நஸ்­ரத் ஹசான், அறி­வார்ந்த தேச, மின்­னி­லக்க அர­சாங்க அலு­வ­ல­கத்­தின் பொது, அனைத்­து­ல­கத் தொடர்பு பிரி­வின் துணை இயக்­கு­ந­ராகப் பணி­யாற்றி வரு­கி­றார்.

இதற்கு முன் தமிழ் வானொலி, ஒளி­வழி செய்­தி­யா­ளா­ரா­க­வும் நடப்பு விவ­கார நிகழ்ச்சி படைப்­பா­ள­ராகவும் செயல்­பட்ட அனு­ப­வம் இவ­ருக்கு உண்டு. ஊட­கத் துறை­யில் இருந்­த­போது, ஆங்­கில செய்­தி­யா­ள­ராக செயல்­பட்­டால்­தான் கூடு­தல் அங்­கீ­கா­ரம் கிடைக்­கும் என்று சிலர் கூறு­வதை தாம் ஏற்­க­வில்லை என்­றும் கிடைக்­கும் வாய்ப்­பு­களை எப்­படி பயன்­ப­டுத்­திக்­கொள்­கி­றோம் என்­ப­தில்­தான் உள்­ளது என்றும் அவர் விளக்­கி­னார்.

பயி­ல­ரங்­கில் பேசிய தொடர்பு, தக­வல் அமைச்­சின் அர­சாங்­கத் தொடர்­புத் துறை உதவி இயக்குந ரான திரு வே. நாரா­ய­ணன், வேலைக்கு அப்­பால் மாண­வர் பரு­வத்­தி­லி­ருந்து தமிழ் நாட­கங்­களில் தமக்கு மிகுந்த ஈடு­பாடு இருந்ததைப் பகிர்ந்­து­கொண்­டார்.வேலை செய்ய தொடங்­கி­ய­தி­லி­ருந்து சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மொழிபெ­யர்ப்பு விரி­வு­ரை­யா­ளர், நாடா­ளு­மன்­றத்­தில் மொழி பெ­யர்ப்­பா­ளர் எனப் பல்­வேறு தமிழ் சார்ந்த பணி­களில் அனு­ப­வம் பெற்று வரு­கை­யில் தமிழ்மொழி­யின் மீது அதிக பிடி­மா­னம் வந்­தது என்று குறிப்­பிட்­டார் 37 வயது திரு நாரா­ய­ணன்.

தமிழ்­மொழி தெரிந்­தி­ருப்­பது ஒரு வேலைத் திறன் என்­றும் எந்­தப் பணிக்­குச் சென்­றா­லும் அத் திறன் தமக்கு உதவும் என்­றும் அவர் தெரி­வித்­தார். தமிழ்மொழி சார்ந்த துறை­களில் சம்­ப­ளம் அதிகம் இருக்­காது அல்­லது முன்­னேறு­வது கடி­னம் போன்ற தவ­றான கருத்துகள் சில­ருக்கு இருக்­கக்­கூ­டும் என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!