புதுமையைப் புகுத்தும் ‘ஸ்ரீசன்’ ஜெயந்தி

- இந்து இளங்­கோ­வன்

‘சப்­பர்’ என்­பது இரவு உண­விற்­குப் பிறகு நள்­ளி­ரவு , பின்­னி­ரவு நேரத்­தில் உண்­ணும் உணவு. இதற்­கா­கவே இளை­யர் கூட்­டம் இரவு நேரம் உண­வ­கங்­களில் அலை­மோ­தும். இந்த ‘சப்­பர்’ உண­வுக்கு பேர்­போன உண­வ­கங்­களில் ஸ்ரீசன் எக்ஸ்­பி­ர­சும் ஒன்று.

சிராங்­கூன் கார்­டன்ஸ், புக்­கிட் பாத்­தோக், அங் மோ கியோ, தெம்­ப­னிஸ் ஆகிய நான்கு வட்­டா­ரங்­களில் உள்ள கிளை­களும் இரவு 7 மணிக்­குப் பிறகு வாடிக்­கை­யா­ளர்­கள் நிரம்பி காணப்­படும்.

வித வித­மான பரோட்­டாக்­கள், வித்­தி­யா­ச­மான குளிர்பானங்­கள், தெற்கு இந்­திய உணவு, வட இந்­திய உணவு, பிர­சித்தி பெற்ற உள்­ளூர் உணவு வகை­கள், மேற்­கத்­திய உணவு என வாடிக்­கை­யா­ளர்­க­ளைச் சுண்­டி­யி­ழுக்­கிறது இந்த உண­வ­கம்.

இந்த உண­வ­கத்தை எட்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு, 2012ஆம் ஆண்­டில் தொடங்கி படிப்படி­யாக விரி­வு­ப­டுத்தி வாடிக்­கை­யா­ளர்­கள் மத்­தி­யில் பிர­ப­ல­மான உண­வ­க­மாக தடம் பதித்­துள்­ளார் உண­வ­கத்­தின் உரி­மை­யா­ளர் திரு­மதி ஜெயந்தி இளங்­கோ­வன், 34.

இரண்டு பிள்­ளை­க­ளுக்­குத் தாயான இவ­ருக்கு இவர் நடத்தி வரும் வர்த்­த­க­மும் மூன்­றா­வது குழந்­தை­போல் எனக் கூறு­கி­றார். இந்த வர்த்­த­கத்­துக்­கான யோசனை தோன்­றி­ய­தி­லி­ருந்து ஒவ்­வொரு படி­யி­லும் தனது புத்­தாக்க சிந்­த­னை­யைக் கொண்டு உண­வ­கத்தை மேம்­ப­டுத்தி வரு­கி­றார். ஆரம்ப நாட்­களில் ‘மைலோ டவர்’ (Milo Tower) என்ற ஒரு வித­மான குளிர்­பான பரி­மா­று­தல் முறை­யால் பிர­பலமடைந்த ஸ்ரீசன் எக்ஸ்­பி­ரஸ், இளை­ஞர்­களை கவ­ரும் வண்­ணம் அமைந்­துள்­ளது. ஓர் உண­வ­கம் என்­ப­தற்கு மேல் நண்­பர்­கள் சேர்ந்து ஓய்வு நேரத்­தில் சந்­திக்க அவர்­கள் தேர்ந்­தெ­டுக்­கக்­கூ­டிய இட­மாக ஸ்ரீசன் உரு­வெ­டுக்க வேண்­டும் என்­ப­தில் திரு­மதி ஜெயந்தி உறு­தி­யாக இருந்­தார்.

“முன்­பெல்­லாம் வாடிக்­கை­யா­ளர்­கள் கடைத்­தொ­கு­தி­களில் விற்­கப்­படும் இரு பரோராட்­டாக்­கள் மற்­றும் கோழிக் கறி­க­ளுக்கு $7லிருந்து $8 வரை செலுத்த தயா­ராக இருந்­த­னர். விலை குறித்து அவர்­கள் எந்­த­வி­த­மான அதி­ருப்­தி­யை­யும் வெளிப்­ப­டுத்­த­வில்லை. ஒரு வர்த்­த­கத்தை நடத்­தும் பொழுது விளம்­ப­ரம் மிக­வும் முக்­கி­ய­மான ஒன்று என அப்­போது நான் புரிந்­து­கொண்­டேன். ‘Branding’ எனும் சந்­தைப்­ப­டுத்­து­தல் உத்­தி­யில் அதிக கவ­னம் செலுத்த தொடங்­கி­னேன். பரி­மா­றும் தட்­டி­லி­ருந்து உண­வு­

வ­கைப்பட்­டி­யல், நிறுவனத்தின் அடை­யா­ளச் சின்­னம் வரை அனைத்­தை­யும் பார்த்­துப் பார்த்து வடி­வ­மைத்­தேன். செய்­யும் ஒவ்­வொன்­றி­லும் புது­மை­யைப் புகுத்­த­வேண்­டும் என்ற எண்­ணத்­து­டன் செயல்­பட்­டேன். நான் கற்­றுக்­கொண்ட பெரும்­பா­லான விஷ­யங்­கள் எனது அனு­ப­வங்­க­ளி­லி­ருந்து வந்­தவை. உதா­ர­ண­மாக, உண­வ­கத்­தில் வேலை செய்ய தொழி­லா­ளர்­க­ளைப் பெற எவ்­வாறு விண்­ணப்­பிப்­பது என்­று­கூட எனக்­குத் தெரி­யா­மல் இருந்­தது. நான் மனி­த­வள அமைச்சை தொடர்­பு­கொண்டு நடை­மு­றை­க­ளைப் பற்றி அறிந்­து­கொண்­டேன். எனக்­குத் தெரி­யாத விஷ­யங்­க­ளைக் கற்­றுக்­கொள்ள கூடு­தல் முயற்சி எடுத்­தேன். எப்­போ­தும் பல கேள்­வி­க­ளைக் கேட்­டுக்­கொண்டே இருப்­பேன். கேள்­வி­கள் கேட்­டால்­தான் கற்­றுக்­கொள்ள முடி­யும்,” என்­கிறார் திரு­மதி ஜெயந்தி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!