தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கான்பரா அருகே கலவரம்- 12 பேர் கைது

1 mins read
36c779c6-0082-4701-b2c2-4df43ede0580
-

கான்பரா வட்டாரத்தில் நடந்த கலவரத்தின் தொடர்பில் ஆறு ஆடவர்களும் ஆறு பெண்களும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் கான்பரா ஸ்திரீட்டின் புளோக் 103 'பி' யில் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு நடந்தது.

சம்பவ இடத்திற்கு அருகில் வசிக்கும் 'பாண்டா' என்பவர், அந்தக் கலவரத்தைக் காட்டும் படங்களைப் பதிவேற்றம் செய்தார். "அவர்கள் ஒருவரோடு ஒருவர் கைகலப்பில் ஈடுபட்டிருந்தனர்," என்று அவர் தெரிவித்தார்.

பின்னிரவு 3 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தின் தொடர்பில் 18 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்ட 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

32 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு ஆடவர்கள் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்தச் சம்பவத்தை போலிசார் விசாரித்து வருகின்றனர்.