சுடச் சுடச் செய்திகள்

மலேசியாவிடம் இருந்து மின்சாரம் வாங்க முடிவு

சிங்கப்பூர் ஈராண்டு முன்னோட்டத் திட்டம்

மலே­சி­யா­வி­டம் இருந்து சிங்­கப்­பூர் ஈராண்­டு­க­ளுக்கு மின்­சா­ரத்தை வாங்­க­வி­ருக்­கிறது.

முன்­னோட்டத் திட்டமாக இடம்­பெ­றும் இந்த நட­வ­டிக்­கை­யின் மூலம் 100 மெகா­வாட் மின்­சா­ரம் இறக்­கு­மதி செய்­யப்­படும் என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­துள்­ளார்.

இது, சிங்­கப்­பூ­ரின் உச்ச அளவு மின்­சா­ரத் தேவை­யில் 1.5 விழுக்­காட்டை ஈடு­கட்­டும் எனச் சொல்­லப்­பட்­டது.

“வட்­டார நாடு­களில் இருந்து தூய எரி­சக்­தி­யைப் பெற்று, நமது எரி­சக்தி மீள்­தி­றனை மேம்­ப­டுத்த இந்த முன்­னோட்ட முயற்சி உத­வும். இதன் தொடர்­பில் மலே­சி­யா­வு­டன் அணுக்­க­மாக ஒத்­து­ழைத்து வரு­கி­றோம். அவர்­க­ளின் வலு­வான ஆத­ர­விற்கு நன்றி,” என்று சிங்­கப்­பூர் அனைத்­து­லக எரி­சக்தி வாரத்­தின் நேற்­றைய தொடக்க நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றி­ய­போது அமைச்­சர் சான் தெரி­வித்­தார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்­தில் இருந்து மலே­சி­யா­வில் இருந்து மின்­சா­ரம் பெறப்­ப­ட­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. சிங்­கப்­பூர்-மலே­சியா இடை­யி­லான கட­ல­டிக் கம்­பி­வட இணைப்­பின் மூல­மாக மின்­சார இறக்­கு­மதி இடம்­பெ­றும்.

மற்ற நாடு­களில் இருந்து மின்­சா­ரம் பெறு­வ­தற்கு இந்த முன்­னோட்ட முயற்சி வழி­ய­மைத்­துக் கொடுக்­கும் என்று அறி­யப்­ப­டு­வதாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறு­கிறது.

உல­கின் ஆக நீள­மான கட­லடி உயர்­மின்­ன­ழுத்­தக் கம்­பி­வ­டம் மூல­மாக வடக்கு ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இருந்து சிங்­கப்­பூ­ருக்­குச் சூரிய மின்­சக்­தியை வழங்­கும் வகை­யில், இரண்டு ஆஸ்­தி­ரே­லிய செல்­வந்­தர்­கள் பல மில்­லி­யன் டாலரை முத­லீடு செய்­தி­ருப்­ப­தாக கடந்த நவம்­ப­ரில் ராய்ட்­டர்ஸ் நிறு­வ­னம் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

சூரிய சக்தி மூலம் அதிக மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்­யும் முயற்­சி­களை சிங்­கப்­பூ­ரும் முடுக்கி­விட்­டுள்­ளது. 2025ஆம் ஆண்டு வாக்­கில் 1.5 கிகா­வாட் சூரிய மின்­சக்­தியை உற்­பத்தி செய்ய இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­தாக திரு சான் குறிப்­பிட்­டார்.

இது சிங்­கப்­பூ­ரின் மின்­சா­ரத் தேவை­யில் 2 விழுக்­காட்­டைப் பூர்த்தி செய்­யும்.

“சூரிய சக்­தியே நமக்கு மிக­வும் நம்­பிக்­கை­ய­ளிக்­கும் புதுப்­பிக்­கத்­தக்க ஆற்­றல் மூல­மாக இருக்­கிறது. நமது மின்­சார உற்­பத்­தி­யில் அதன் பங்கை நாம் அதி­கப்­ப­டுத்த வேண்­டும்,” என்­றார் அமைச்­சர் சான்.

 

புதுப்­பிக்­கத்­தக்க ஆற்­றல் மூலம்

 

இத­னி­டையே, மின்­சார இறக்­கு­மதி முன்­னோட்டத் திட்டத்தின் கீழ் மலே­சி­யா­வி­லுள்ள ஒரு புதுப்­பிக்­கத்­தக்க ஆற்­றல் மூலத்­தி­ல் இ­ருந்து மின்­சா­ரம் பெற விரும்பு­வ­தாக எரி­சக்­திச் சந்தை ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

“மின்­சா­ரம் இறக்­கு­மதி செய்ய விரும்­பும் நிறு­வ­னங்­கள் எந்த வழி­களில் மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்­கின்­றன என்­ப­தைக் குறிப்பிட வேண்­டும். மின்­வி­நி­யோ­கத்­தில் நம்­ப­கத்­தன்மை, கடந்­த­கா­லச் செயல்­பா­டு­கள் உள்­ளிட்ட அம்­சங்­களும் கருத்­தில்­கொள்­ளப்­படும்,” என்று ஆணை­யம் குறிப்­பிட்­டது.

ஈராண்டு முன்­னோட்ட முயற்­சிக்­குப் பிறகு, மேல­திக மின்­சார இறக்­கு­ம­தித் திட்­டங்­கள் குறித்து பரி­சீ­லிக்­கப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon