சிங்கப்பூர்: நிகழ்ச்சிக்கு முன் பரிசோதனை தொடக்கம்

சிங்கப்பூரில் முதன்முதலாக அமலான புதிய முறை பிரச்சினை இன்றி சரளமாக நடந்தது

சிங்­கப்­பூ­ரில் நிகழ்ச்­சி­க­ளுக்­கு செல்­வோ­ருக்கு நிகழ்ச்சி தொடங்­கு­வ­தற்கு முன்­ன­தாக புதிய முறை­யில் கொவிட்-19 பரி­சோ­த­னையை நடத்­தும் நடைமுறை நேற்று சர­ள­மா­கத் தொடங்­கி­யது.

அந்த முன்­னோடி முறை­யில் ஏஆர்டி என்ற கொரோனா கிரு­மித்­தொற்று பரி­சோ­தனை பின்பற்­றப்­பட்­டது.

ஏஆர்டி பரி­சோ­தனை மூலம் 30 நிமி­டங்­க­ளுக்­குள் தொற்று பற்­றிய சோதனை முடிவு தெரிந்­து­வி­டும்.

ஒரு­வ­ருக்கு கொவிட்-19 கிருமித் தொற்று இருக்­கி­றதா என்­ப­தைக் கண்­ட­றிய வழக்­க­மாக பிசி­ஆர் என்ற பரி­சோ­தனை நடத்­தப்­ ப­டு­கிறது.

இந்த முறை ஏஆர்டி முறையை விட மிக­வும் துல்­லி­ய­மா­னது என்­றா­லும் பரி­சோ­தனை முடிவு தெரிய ஒரு நாளா­கும்.

சுகா­தார அமைச்­சர் கான் கிம் யோங், புதிய முறை முன்­னோடி திட்­டம் மூலம் பரி­சோ­திக்­கப்­படும் என்று அக்­டோ­பர் 20ஆம் தேதி அறி­வித்து இருந்­தார்.

புதிய பரி­சோ­தனை முறை வெற்­றி­பெற்­றால் நிகழ்ச்­சி­க­ளுக்கு அதி­கம் பேரை அனு­ம­திக்­க­லாம் என்று அமைச்­சர் தெரி­வித்து இருந்­தார்.

இருந்­தா­லும் புதிய பரிசோ­தனை அவ்­வ­ளவு துல்­லி­ய­மாக இராது என்­ப­தால் சமூக இடை­வெளி போன்­றவை தொடர்வது அவ­சி­யம் என்­றும் அவர் குறிப்­பிட்டு இருந்­தார்.

எரி­சக்தி சந்தை ஆணை­யம் ஏற்­பாட்­டில் நேற்று சேண்ட்ஸ் காட்சிக்கூடம் மற்­றும் மாநாட்டு நிலை­யத்­தில் சிங்­கப்­பூர் அனைத்­து­லக எரி­சக்தி வாரம் 2020 நிகழ்ச்சி தொடங்­கி­யது.

காணொளி வாயி­லா­க­வும் நேரடி­யா­க­வும் நடக்­கும் அந்த நிகழ்ச்சி­யில் நேர­டி­யாக 250 பேரும் காணொளி மூலம் 10,000 பேரும் கலந்­து­கொள்­வார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மாநாடு நடை­பெ­றும் இடத்­தில் நேற்று கூட்­டம் அவ்­வ­ள­வாக இல்லை. டிரேஸ்­டு­கெ­தர் செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்­து­கொள்­ளும்­படி நினை­வூட்­டும் அறி­விப்­பு­கள் எங்­கும் இடம்­பெற்­றி­ருந்­தன. அதற்­கான வில்லைகளும் கொடுக்­கப்­பட்­டது.

மாநாட்­டுக்­குச் சென்­ற­வர்­கள் பாது­காப்பு நுழை­வுச் சாத­னத்­தில் தங்­க­ளைப் பரி­சோ­தித்­துக் கொண்­ட­னர். அவர்களின் உடல் வெப்­ப­நிலை அளக்­கப்­பட்­டது.

உள்ளே சென்­ற­தும் அவர்­கள் மூக்­கில் இருந்து திர­வம் எடுக்­கப்­பட்டு கொவிட்-19 பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது. முடி­வு­கள் குறுஞ்­செய்­தி­கள் மூலம் அனுப்­பப்­பட்­டன.

அதைக் காட்­டி­விட்டு அனு­மதி பெற்று உள்ளே சென்­ற­தும் பாது­காப்பு இடை­வெளி போன்­ற­வற்றைக் கடைப்­பி­டித்து அவர்கள் இருக்­கை­களில் அமர்ந்­த­னர்.

முகக்­க­வ­சங்­க­ளை­யும் அணிந்து இருந்­த­னர். பாது­காப்பு இடை­வெளி தூதர்­கள் அங்­கி­ருந்து இவற்றை உறு­திப்­ப­டுத்­தி­னர்.

பெரும்­பா­லா­ன­வர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் புதிய கொவிட்-19 பரி­சோ­தனை முறை­யில் எந்­தப் பிரச்­சி­னை­யும் இருந்­த­தா­கத் தெரி­ய­வில்லை.

சிங்­கப்­பூர் அனைத்­து­லக எரி­சக்தி வார நிகழ்ச்­சி­யின்­போது இந்­தத் தொழில்­து­றை­யி­னர், தொழில்­துறை பற்­றி­யும் அதன் தாக்­கம் பற்­றி­யும் விவா­தித்து பல­வற்­றை­யும் பகிர்ந்­து­கொள்­வார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!