சிங்கப்பூரில் மரங்கள் நடும் திட்டம் மும்மடங்கு அதிகரிக்கப்படும்

சிங்­கப்­பூ­ரில் உள்ள தொழிற்­பேட்­டை­களில் 2030ஆம் ஆண்­டுக்­குள் கூடு­தல் மரங்­கள் நடப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போ­து இருப்பதைவிட அவ்­வி­டங்­களில் உள்ள மரங்­க­ளின் எண்­ணிக்கை மும்­ம­டங்கு அதி­க­ரிக்­கப்­படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று தெரி­வித்­தார்.

நாடெங்­கும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் பசு­மைத் திட்­டத்­தின்­கீழ் இது செயல்­ப­டுத்­தப்­படும்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள தொழிற்­பேட்­டை­களில் தற்­போது 90,000 மரங்­கள் இருப்­ப­தா­க­வும் அடுத்த பத்து ஆண்­டு­க­ளுக்­குள் அங்­குள்ள மரங்­க­ளின் எண்­ணிக்கை 260,00ஆக அதி­க­ரிக்­கப்­படும் என்­றும் திரு லீ தெரிவித்தார்.

“சாலை­யோ­ரங்­களில் மரங்­கள் நடப்­படும். வனப்­ப­கு­தி­யில் இருப்­ப­தைப் போன்ற உணர்வை அவை ஏற்­ப­டுத்­தும். தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட இருக்­கும் இந்­தப் பசு­மைத் திட்­டம் அந்த இடங்­க­ளுக்கு அழகு சேர்க்­கும். அது­மட்­டு­மல்­லாது, சுட்­டெ­ரிக்­கும் வெயி­லி­லி­ருந்து அந்த மரங்­கள் நிழல் தரும்,” என்­றார் அமைச்­சர் லீ.

சமூக ஆத­ர­வு­டன் அடுத்த பத்து ஆண்­டு­களில் சிங்­கப்­பூர் எங்­கும் ஒரு மில்­லி­யன் மரங்­களை நடும் இலக்கை நோக்­கி விரை­கிறது

சிங்­கப்­பூர்.

சிங்­கப்­பூ­ரில் மிக­வும் வெப்­ப­மான பகு­தி­களில் தொழிற்­பேட்­டை­களும் அடங்­கும். எனவே, அந்த இடங்­களில் கூடு­த­லாக 100,000 மரங்­களை நடப்­போ­வ­தாக கடந்த மார்ச் மாதத்­தில் அர­சாங்­கம் அறி­வித்­தது. அந்த எண்­ணிக்கை தற்­போது 170,000ஆக உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

மரங்­கள் நடப்­ப­டு­வ­து­டன் சுற்­றுப்­புற உணர்­கருவிகள் பொருத்­தப்­படும். வெப்­ப­நிலை, ஈரப்­ப­தம், காற்­றின் வேகம் ஆகி­யவை தொடர்­பாக தர­வு­கள் சேக­ரிக்­கப்­படும்.

தொடர்ந்து நடை­பெற்று வரும் ஆய்­வுத் திட்­டங்­களை இந்­தத் தர­வு­கள் ஆத­ரிக்­கும்.

நாட்டை வெயி­லி­லி­ருந்து பாது­காத்து குள­ர்ச்­சி­யான சுற்­றுப்­பு­றத்தை உரு­வாக்க இந்­தத் தர­வு­கள் உத­வும்.

இயற்கை எழில்­மிகு இடங்­க­ளு­டன் இந்த தொழிற்­பேட்­டை­கள் இணைக்­கப்­பட்டு தொடர்ச்­சி­யான பசு­மைக் கட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­படும் என்று அமைச்­சர் லீ தெரி­வித்­தார்.

உதா­ர­ணத்­துக்கு, சுங்கை புலோ இயற்­கைப் பூங்­கா­வு­ட­னும் ரயில் பசு­மைப் பாதை­யு­ட­னும் சுங்கை காடுட் பசுமை வட்­டா­ரம் இணைக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

“பரு­வ­நிலை மாற்­றங்­க­ளால் ஏற்­படும் பாதிப்­பு­களை எதிர்­கொள்ள இந்த முயற்­சி­கள் உத­வும். வாழ்­வ­தற்கு ஏது­வான, நீடித்த நிலைத்­தன்­மை­யு­ட­னான சுற்­றுப்­பு­றத்தை சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு இது தரும்,” என்று ஜூரோங் தீவில் நேற்று நடை­பெற்ற மரம் நடும் விழா­வின்­போது செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அமைச்­சர் லீ கூறி­னார்.

நேற்று நடை­பெற்ற இந்த நிகழ்­வில் பங்­கேற்­றோர் ஜூரோங் தீவில் 100 மரங்­களை நட்­ட­னர். கொவிட்-19ஐ முன்­னிட்டு பாது­காப்­பான தூர இடை­வெளி முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யு­டன் இந்த மரம் நடும் விழா நடை­பெற்­றது.

வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகு­தி­யின் பூன் லே தொகு­தி­யைச் சேர்ந்த குடி­யி­ருப்­பா­ளர்­களும் ஜூரோங் தீவில் உள்ள 32 நிறு­வ­னங்­க­ளின் பிர­தி­நி­தி­களும் நிகழ்­வில் பங­கேற்­ற­னர்.

இத்­த­கைய நிகழ்­வில் இத்­தனை பேர் பங்­கேற்­றது இதுவே முதல்­முறை.

2022ஆம் ஆண்­டுக்­குள் ஜூரோங் தீவில் கூடு­த­லாக 21,000 மரங்­களை நட அதி­கா­ரி­கள் இலக்கு கொண்­டுள்­ள­னர். 2022ஆம் ஆண்­டுக்­குள் ஜூரோங் தீவில் மொத்­தம் 44,000 மரங்­கள் இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon