சுடச் சுடச் செய்திகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டால் விமானங்களில் கிருமித்தொற்று அபாயம் குறைவு

காற்­றைத் தூய்­மைப்­ப­டுத்­து­வது, பய­ணி­க­ளைப் பாது­காப்­பான தூர இடை­வெளி விதி­மு­றை­யைக் கடைப்­பி­டிக்க வைப்­பது ஆகி­யவை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தால் கொரோனா கிரு­மித்­தொற்று நெருக்­கடி நிலை­யி­லும் விமா­னங்­களில் பய­ணம் செய்­வது பாது­காப்­பா­னது என்று நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இருப்­பி­னும், கிரு­மித்­தொற்று ஏற்­படும் அபாயத்தை முற்­றி­லும் முறி­ய­டிக்க வேண்­டு­மென்­றால் பய­ணி­கள் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுப்­பது அவ­சி­யம் என்று அவர்­கள் கூறி­னர்.

விமா­னங்­களில் பய­ணம் செய்து­ கொண்­டி­ருக்­கும்­போது மற்ற பய­ணி­யி­ட­மி­ருந்து கிருமி பர­வும் அபா­யம் அறவே இல்லை என்று கூறி­விட முடி­யாது என நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

விமா­னங்­களில் பய­ணம் செய்­யும்­போது கொவிட்-19 கிருமி பர­வும் சாத்­தி­யம் மிக­வும் குறைவு என்று விமா­னப் போக்­கு­வ­ரத்து சங்­கம் இம்­மா­தம் தெரி­வித்­ததை அடுத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் தேவை என்­பதை நிபு­ணர்­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

விமா­னப் பய­ணங்­க­ளின்­போது சில­ருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பதை சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சோ சுவீ ஹோக் பொது சுகா­தா­ரப் பள்­ளி­யின் தலை­வர் பேரா­சி­ரி­யர் டியோ யிக் யிங் சுட்­டி­னார்.

“விமா­னப் பய­ணங்­க­ளின்­போது கொவிட்-19 கிருமி பர­வும் சாத்­தி­யம் இருப்­ப­தைப் பய­ணி­கள் உணர வேண்­டும். தங்­க­ளைப் பாது­காத்­துக்­கொள்ள அனைத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளை­யும் அவர்­கள் எடுப்­பது அவ­சி­யம்,” என்­றார் அவர்.

முகக்­க­வ­சம் அணி­வது, சுகா­தா­ர­மான பழக்­க­வ­ழக்­கங்­க­ளைக் கடைப்­பி­டிப்­பது கிருமி பர­வும் அபா­யத்தை வெகு­வா­கக் குறைக்­கும் என்று பேரா­சி­ரி­யர் டியோ தெரி­வித்­தார்.

“விமா­னத்­தில் பய­ணம் செய்­து­ கொண்­டி­ருக்­கும்­போது உணவு சாப்­பி­டு­வ­தற்­காக பய­ணி­கள் தங்­கள் முகக்­க­வ­சங்­க­ளைக் கழற்­றும்­போது மட்­டுமே கிருமி பர­வும் அபா­யம் உள்­ளது. ஆனால் வீட்­டில் அல்­லது உண­வகங்­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது கிருமி பர­வும் அபா­யம் குறை­வாக உள்­ளது. பய­ணி­கள் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் பார்க்­கும்­ப­டி­யாக அம­ரா­தது இதற்கு முக்­கிய கார­ணம்,” என்­றார் அவர்.

விமா­னங்­க­ளின் கழி­வ­றை­க­ளைப் பயன்­ப­டுத்­தும்­போது கிரு­மித்­தொற்று ஏற்­படும் ஆபத்து இருப்­ப­தாக மவுண்ட் எலி­ச­பெத் நொவீனா மருத்­து­வ­ம­னை­யைச் சேர்ந்த தொற்­று­நோய் நிபு­ண­ரான டாக்­டர் லியோங் ஹோ நாம் தெரி­வித்­தார்.

கழி­வ­றை­களில் உள்ள பொருட்­க­ளைத் தொடு­வ­தற்கு முன்பு அவற்றை சுத்­தி­க­ரிப்­பா­னைக் கொண்டு சுத்­தம் செய்ய வேண்­டும் என்­றும் கழி­வ­றை­யைப் பயன்­ப­டுத்­தி­ய­தும் கைகளை நன்­றா­கக் கழுவ வேண்­டும் என்­றும் அவர் கூறி­னார்.

விமா­னங்­களில் பய­ணி­கள் நடப்­ப­தற்­கான பாதை­க­ளுக்கு அரு­கில் உள்ள இருக்­கை­களில் அமர்­வ­தைப் பய­ணி­கள் தவிர்ப்­பது நல்­லது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon