பிறக்கும்போது 345 கிராம் மட்டுமே; பெற்றோரின் தளராத முயற்சியால் முன்னேற்றப் பாதையில் நூர் ஸையா

சிங்­கப்­பூ­ரில் ஆறு மாதங்­க­ளுக்கு முன் குறை­மா­தப் பிர­ச­வத்­தில் பிறந்த பெண் குழந்தை ஒன்று, ஆபத்­தான கட்­டத்­தைத் தாண்டி இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பொது­வாக கர்ப்­ப­கா­லம் ஏறக்­குறைய 40 வாரங்­கள் நீடிக்­கும்.

நூர் ஸையா முகம்­மது சவ்ஃபி எனும் பெய­ரி­டப்­பட்­டுள்ள இந்தக்­ கு­ழந்தை வெறும் 23 வாரம், ஆறு நாட்­களில் பிறந்­தது. பிறந்தபோது இதன் எடை 345 கிராம் மட்­டுமே. உள்­ளங்­கை­யில் கொள்­ளும் அளவு­தான் இதன் உய­ரம் இருந்­தது. ஒரு பெரி­ய­வ­ரின் விரல் அள­வுதான் இக்­கு­ழந்­தை­யின் கை, கால் இருந்­தன.

தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யில் இவ்­வாண்டு மார்ச் 27ஆம் தேதி இக்­கு­ழந்தை பிறந்­தது. சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 நோய்த்­தொற்று உச்­சத்­தில் இருந்த கால­கட்­டம் அது.

பிறந்து ஆறு மாதங்களான நிலையில், தற்­போது நூர் ஸையா­வின் எடை 4.27 கிலோ­கி­ராம்.

இக்­கு­ழந்­தை­யின் பெற்­றோ­ரான திரு முகம்­மது சவ்ஃபி, 36, மற்­றும் திரு­மதி ரொஹானி முஸ்­தானி, 37, அவ­ச­ர­கால அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை ஈன்­றெ­டுப்­பது குறித்து இரண்டு, மூன்று மணி நேரத்­தில் முடி­வெ­டுக்க வேண்­டி­ இருந்­தது.

வயிற்­று­வ­லிக்­காக திரு­மதி ரொஹானி மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றார். பின்­னர் வீடு திரும்பி ஓய்வு எடுப்­போம் என்று எதிர்­பார்த்த இவ­ருக்கு அதிர்ச்சி காத்­தி­ருந்­தது.

“எனக்­குச் சாதா­ரண வயிற்­று­வலி­தான் ஏற்­பட்­டது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், உயர் ரத்த அழுத்­தம் அறி­கு­றி­கள் கொண்ட ஒரு­வித மருத்­து­வப் பிரச்­சினை (pre-eclampsia) எனக்கு இருப்­ப­தாக மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர். இத­னால் அடுத்த நாளே குழந்­தை­யைப் பெற்­றெ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது,” என்­றார் திருமதி ரொஹானி.

ஒரு சில மாதர்­க­ளுக்­குக் கர்ப்­ப­கா­லத்­தின் இரண்­டா­வது பாதி­யில் pre-eclampsia எனும் மருத்துவப் பிரச்­சினை ஏற்­ப­டு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

திரு­மதி ரொஹா­னி­யின் குழந்தை உயிர் பிழைக்­க 20 விழுக்­காடு வாய்ப்பு இருப்­ப­தாக இவ­ரி­டம் தெரி­விக்­கப்­பட்­டது.

என்­றா­லும், ஆபத்­தைக் கருதி குழந்­தை­யைப் பெற்­றெ­டுத்து, அதற்குப் பிறகு நடப்­ப­வற்றை இறை­வனிடம் விட்­டு­விட இத்­தம்­பதி முடி­வெ­டுத்­த­னர். குழந்தை பிறந்­த­வு­டன் தீவிர சிகிச்­சைப் பிரி­வுக்கு அது கொண்­டு­செல்­லப்­பட்­டது.

“குழந்தை உயிர் பிழைக்க 20 விழுக்­காடு என்­றா­லும் அது­வும் நம்­பிக்­கை­தானே. எது நடந்­தா­லும், விதிப்­ப­டியே நடக்­கும். குழந்­தையை ஈன்­றெ­டுத்­த­தில் எனக்கு மட்­டற்ற மகிழ்ச்சி,” என்­றார் திரு­மதி ரொஹானி.

நூர் ஸையா, இத்­தம்­ப­திக்கு நான்­கா­வது குழந்தை. இவர்­க­ளுக்கு ஏழு, நான்கு வய­தில் இரு மகள்­களும் ஆறு வய­தில் ஒரு மக­னும் உள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!