சுடச் சுடச் செய்திகள்

கல்வி அமைச்சு: பிஎஸ்எல்இ உட்பட தேசிய அளவிலான தேர்வு முடிவுகள் இணையத்திலும் வெளியிடப்படும்

தேசிய அளவிலான தேர்வு முடிவுகள் இணயம் வழியாக வெளியிடப்படும் என கல்வி அமைச்சு, சிங்கப்பூர் தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு வாரியம் (SEAB) ஆகியவை இன்று (அக்டோபர் 27) தெரிவித்துள்ளன.

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் உத்தேச தேதிகள் கல்வி அமைச்சின் இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தொடக்கக் கல்வி இறுதியாண்டு தேர்வு (PSLE) முடிவுகள் நவம்பர் மாதம் 25 முதல் 27ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்; 

ஜிசிஇ வழக்க நிலைத் தேர்வு (N Level) முடிவுகள் டிசம்பர் மாதம் 17 முதல் 21ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்;

ஜிசிஇ சாதாரண நிலைத் தேர்வு (O Level) முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11 முதல் 13ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்;

ஜிசிஇ  மேல்நிலைத் தேர்வு (A Level) முடிவுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 முதல் 23ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்;

- என கல்வி அமைச்சின் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகும் சரியான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

கல்வி அமைச்சின் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தங்களது தேர்வு மதிப்பெண் தாள்களை பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம். கொவிட்-19 தொடர்பான பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon