லியூவிடமிருந்து பார்த்தி லியானி இழப்பீடு கேட்பதாக இல்லை

சாங்கி விமான நிலை­யக் குழு­மத் தலை­வர் லியூ மன் லியோங்­கி­ட­மிருந்து இழப்­பீடு கோரப் போவ­தில்லை என்று அவ­ரி­டம் வேலை பார்த்த முன்­னாள் பணிப்­பெண் பார்த்தி லியானி முடி­வெ­டுத்­துள்­ளார். திரு­வாட்டி பார்த்திக்கு இது­வரை ஏற்­பட்ட இழப்­பீ­டு­க­ளின் மதிப்பு சுமார் $71,000 என்று அவ­ரின் வழக்­க­றி­ஞர் அனில் பால்­சந்­தனி குறிப்­பிட்­டார்.

நான்கு ஆண்­டு­க­ளுக்­கான சம்­ப­ளம், திரு­வாட்டி பார்த்திக்கு அடைக்­க­லம் அளித்­த­தால் குடி­யே­றி­க­ளின் பொரு­ளி­யல் நிலைக்­கான மனி­தா­பி­மான அமைப்­புக்கு (ஹோம்) ஏற்­பட்ட செல­வு­கள் ஆகி­யவை இந்த 71,000 வெள்­ளி­யில் அடங்­கும். இருப்­பி­னும், திரு­வாட்டி பார்த்தி தம் முன்­னாள் முத­லா­ளி­யி­டம் இழப்­பீடு கேட்க விரும்­ப­வில்லை என்று உயர் நீதி­மன்­றத்­தில் நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

திரு­வாட்டி பார்த்தி குற்­ற­மற்­ற­வர் என்று உயர் நீதி­மன்­றம் தீர்ப்­பளித்த பின், பல நிகழ்­வு­கள் நடந்து­விட்­ட­தா­கக் குறிப்­பிட்ட திரு அனில், திரு லியூ தம் சாங்கி விமான நிலை­யக் குழு­மத் தலை­வர் பொறுப்­பி­லி­ருந்­தும் சர்­பானா ஜூரோங் நிறு­வ­னத்­தின் தலை­வர் பொறுப்­பி­லி­ருந்­தும் வில­கி­ய­தைக் குறிப்­பிட்­டார்.

அவ­ருக்கு மேலும் பிரச்­சி­னை­கள் தர விரும்­ப­வில்லை என்று தம் கட்­சிக்­கா­ரர் கூறி­யி­ருந்­த­தாக திரு அனில் தெரி­வித்­தார்.

இரு­த­ரப்­பும் சம­ர­சப் பேச்­சைக் கரு­த­லாம் என்று நீதி­மன்­றத்­தில் வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon