தளவாட மையமாக சிங்கப்பூரின் நிலை வலுவடைந்துள்ளது

கொரோனா கிரு­மித்­தொற்று நெருக்­க­டி­நி­லை­யி­லும் உல­க­ளா­விய தள­வாட மைய­மாக சிங்­கப்­பூர் அதன் நிலையை வலுப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக வர்த்­தக, தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­துள்­ளார்.

செயல்­தி­றன், நம்­ப­கத்­தன்மை, மீள்­தி­றன் ஆகிய போட்­டித்­தன்மை ஆற்­ற­ல்­க­ளைக் கொண்டு சிங்­கப்­பூர் இந்த நிலையை அடைந்­தி­ருப்­ப­தாக அவர் கூறி­னார்.

நேற்று சாங்­கி­யில் ஜெர்­மா­னிய தள­வாட நிறு­வ­மான டிபி ஷெங்­க­ரின் ஆலைக்­குச் சென்று பார்­வை­யிட்ட பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் திரு சான் பேசி­னார்.

“கொரோனா கிரு­மித்­தொற்று நெருக்­க­டி­நி­லை­யால் உல­க­ளா­விய நிலை­யில் பொருட்­க­ளுக்­கான விநி­யோ­கங்­கள் தடைப்­பட்­டுள்­ள­போ­தி­லும் சிங்­கப்­பூ­ரில் வர்த்­த­கம் தொடர்ந்து நடை­பெற்று வரு­கிறது. இத­னால் அனைத்­து­லக மைய­மாக சிங்­கப்­பூ­ரின் நிலை மேம்­பட்­டுள்­ளது.

“நமது விநி­யோ­கச் சேவை­யின் தரத்­தைத் தக்­க­வைக்க நாம் எடுக்­கும் முயற்­சி­க­ளால் தனித்­தன்­மை­யு­டன் திகழ்­கி­றோம். கூடு­தல் கட்­டுப்­பா­டு­கள், ஏற்­று­மதி கட்­டுப்­பா­டு ­கள் போன்­ற­வற்றை நாம் விதிக்­க­வில்லை,” என்­றார் அமைச்­சர் சான்.

“மாறாக, சிங்­கப்­பூ­ரின் விநி­யோ­கக் கட்­ட­மைப்­பில் தடை ஏதும் ஏற்­பட்­டால் கட்­ட­மைப்­பின் பிற பகுதி­களில் உள்ள தெரி­வு­களை வழங்­கு­வ­தன் மூலம் நிலை­மையை அர­சாங்க அமைப்­பு­கள் உட­ன­டி­யாக சரி­செய்­கின்­றன,” என்­றார் அவர்.

நிறு­வ­னங்­க­ளின் தேவை­க­ளுக்கு ஏற்ப, ஆரம்­பத்­தி­லி­ருந்து முடிவு வரைக்­கும் தேவை­யான தீர்வு போன்ற மேம்­பட்ட தள­வா­டச் சேவை­களை சிங்­கப்­பூர் வழங்­கு­வ­தாக திரு சான் தெரி­வித்­தார்.

“சிங்­கப்­பூ­ரில் பரப்­ப­ளவு, மற்ற நாடு­க­ளு­ட­னான இணைப்பு ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு பார்க்­கும்­போது தள­வா­டத் துறை­யில் அனைத்து அம்­சங்­க­ளி­லும் நாம் போட்டி போடப்­போ­வ­தில்லை. அதிக மதிப்­புள்ள, அவ­ச­ர­மா­கத் தேவைப்­படும், நம்­ப­கத்­தன்மை அதி­கம் தேவை­யுள்ள விநி­யோ­கங்­களில் நாம் கவ­னம் செலுத்­தப்­போ­கி­றோம்,” என்­றார் திரு சான்.

பாயோ ஃபார்மா, தக­வல் தொடர்­புத் தொழில்­நுட்­பம் போன்ற அதிக மதிப்­புள்ள துறை­களை சிங்­கப்­பூர் ஈர்ப்­ப­தா­கக் குறிப்­பிட்ட திரு சான், சிங்­கப்­பூர்­க­ளுக்கு இத்­து­றை­கள் கூடு­தல் வேலை வாய்ப்­பு­களை வழங்­கும் எனக் கூறி­னார்.

சிங்­கப்­பூர் பொரு­ளி­ய­லின் முக்­கிய தூணாக தள­வா­டத் துறை விளங்­கு­கிறது. கடந்த ஆண்டு சிங்­கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் அது $6.8 பில்­லி­யன் அல்­லது 1.4 விழுக்­காடு பங்­க­ளித்­தது. சிங்­கப்­பூ­ரின் தள­வா­டத் துறை­யில் 5,300க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­களில் 86,000க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­கள் உள்­ள­னர்.

டிஎச்­எல், யுசி­எஸ், டிபி ஷெங்­கர் போன்ற முன்­னிலை அனைத்­து­ல­கத் தள­வாட நிறு­வ­னங்­கள் சிங்­கப்­பூரை அவற்­றின் வட்­டா­ரத் தலை­மை­ய­க­மா­கக் கொண்­டுள்­ளன. அடுத்த ஐந்து ஆண்­டு­களில் தள­வா­டத் துறை­யில் 1,500க்கும் மேற்­பட்ட வேலை­களை உரு­வாக்க சிங்­கப்­பூ­ரில் உள்ள பிர­தான தள­வா­டத் துறை நிறு­வ­னங்­கள் திட்­ட­மிட்­டுள்­ள­தாக திரு சான் தெரி­வித்­தார். தள­வாட மைய­மாக அதன் நிலையை மூன்று வழி­களில் சிங்­கப்­பூர் தொடர்ந்து வலி­மைப்­ப­டுத்­தும் என்­றார் அவர்.

உல­க­ளா­விய தள­வாட நிறு­வ­னங்­கள் தொடர்ந்து சிங்­கப்­பூ­ரில் இயங்­கு­வதை உறுதி செய்­வது, தடை­யற்ற வர்த்­தக ஒப்­பந்­தக் கட்­ட­மைப்பை வலி­மைப்­ப­டுத்­து­வது, செயல்­தி­றனை மேம்­ப­டுத்தி ஆகப் புதிய தொழில்­நுட்­பத்­தைப் பயன்­

ப­டுத்­து­வது ஆகிய வழி­கள் கடைப்­பி­டிக்­கப்­படும் என்­றார் திரு சான்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon