கொவிட்-19 பரிசோதனை: தேசிய சேவையாளர்களின் எச்சில் மாதிரிகள் சேகரிக்கப்படும்

கொரோனா கிரு­மித்­தொற்று நெருக்­க­டி­நிலை கார­ண­மாக தேசிய சேவை­யா­ளர்­க­ளுக்­கான பல பயிற்சி­களை சிங்­கப்­பூர் ஆயு­தப் படை தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைத்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யில், பயிற்­சி­கள் படிப்­ப­டி­யாக மீண்­டும் தொடங்­கு­வ­தால் கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ரான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை ஆயு­தப் படை முடுக்­கி­விட்­டுள்­ளது.

வழக்­க­மான மருத்­து­வப் பரி­சோ­த­னை­க­ளைக் காட்­டி­லும் பரி­சோ­தனை முடி­வு­களை விரை­வா­கப் பெற முன்­னோட்­டச் சோத­னை­களை அது நடத்தி வரு­கிறது.

அதன்­படி, தேசிய சேவை­யா­ளர்­க­ளின் எச்­சில் சேக­ரிக்­கப்­பட்டு பரி­சோ­த­னைக்­காக அனுப்­பப்­ப­டு­கிறது.

நிறைய பேரைக் கொண்ட அமைப்புகளில் தங்கள் எச்சிலை சுயமாக சேகரித்து மருத்துவப் பரிசோதனைக்காகக் கொடுப்பது, வழக்கமான கொவிட்-19 மருத்துவப் பரிசோதனையைப் போல அவ்வளவு அசௌகரியத்தை ஏற்படுத்தாத பரிசோதனை முறைகள் போன்றவற்றை நடத்தலாம்.

உதா­ர­ணத்­துக்கு, மூக்­கிற்­குள் விடப்­படும் கரு­வி­களை முழு­மை­யாக உள்ளே விடத் தேவை­யில்லை. பாதி வழி மட்­டும் உள்ளே விட்­டால் போதும்.

இந்தப் முறை­க­ளு­டன் என்­டி­ஜன் விரை­வுச் சோத­னை­க­ளை­யும் ஆயு­தப் படை முன்­னோட்­டச் சோதனையாக நடத்­து­கிறது.

இந்த முன்­னோட்­டச் சோதனை வெற்றி பெற்­றால் பலர் பங்­கேற்­கும் நிகழ்­வு­கள் மீண்­டும் தொடங்­கும் சாத்­தி­யம் உள்­ளது.

உதா­ர­ணத்­துக்கு தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்ள அடிப்­படை ராணு­வப் பயிற்­சிக்­கான தேர்ச்சி அணிவ­குப்பு மீண்­டும் தொடங்­கக்­கூ­டும்.

இந்த மாதத்­தி­லி­ருந்து அனைத்து தேசிய சேவை­யா­ளர்­

க­ளுக்­கும் அவர்­க­ளுக்­குப் பயிற்சி அளிப்­ப­வர்­க­ளுக்கும் அவர்­கள் பயிற்சி முகா­முக்­குத் திரும்­பும்­போது வழக்­க­மான கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­ப­டு­கிறது.

ராணு­வப் பயிற்­சி­க­ளைப் பாது­காப்­பான­தாக வைத்­தி­ருக்க சிங்­கப்­பூர் ஆயு­தப் படை தன்­னால் ஆன அனைத்­தை­யும் செய்­வதை புதிய பரி­சோ­தனை முறை, மாதி­ரி­க­ளைச் சேக­ரிக்­கும் முறை ஆகி­யவை உறுதி செய்­வ­தாக தற்­காப்பு மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது நேற்று தெரி­வித்­தார்.

ஜூரோங் முகா­மில் உள்ள காலாட்­ப­டைப் பயிற்­சிக் கழ­கத்­திற்­குச் சென்று அங்­குள்ள தேசிய சேவை­யா­ளர்­க­ளைச் சந்­தித்­து­விட்டு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் திரு ஸாக்கி பேசி­னார்.

என்­டி­ஜன் விரை­வுச் சோத­னை­கள் முடி­வு­களை விரை­வா­கத் தரு­வது மட்­டு­மல்­லாது, வழக்­க­மான பரி­சோ­த­னை­யை­விட அது மலி­வா­னது, செயல்­ப­டுத்­து­வ­தற்கு எளி­தா­னது.

இருப்பினும் வழக்கமான பிசிஆர் பரிசோதனை முறை துல்லியமானது என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஏறத்தாழ 300 முழுநேர தேசிய சேவையாளர்களும் ராணுவ வீரர்களும் என்டிஜன் விரைவுச் சோதனைகளைச் செய்துள்ளனர்.

கிட்டத்தட்ட 400 பேர் எச்சில் சேகரிப்பு முன்னோட்டச் சோதனையில் பங்கேற்றுள்ளனர்.

அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், தேசிய சேவையாளர்கள் தங்கள் எச்சிலைச் சேகரித்துத் தருகின்றனர்.

பரிசோதனைக்குக் குறைந்தது 2 மில்லிலிட்டர் எச்சில் தேவை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!