நவம்பர் 1 முதல் நேரடிக் கலைப் படைப்புகளுக்கு அனுமதி

நவம்­பர் முதல் தேதி­யில் இருந்து சமூக மன்­றங்­கள் போன்ற குறிப்­பிட்ட இடங்­களில் சிறிய அள­விலான நேர­டிக் கலைப் படைப்­பு­கள் அரங்­கேற அனு­ம­திக்­கப்­படும்.

சிறு அள­வி­லான இந்த நேர­டிப் படைப்­பு­க­ளைக் காண மக்­களை ஊக்­கு­விக்­கும் வகை­யில் கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் தம் ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டி­ருந்­தார்.

“வெளியே செல்­லுங்­கள் (பாது­காப்பை மன­தில் கொண்­டு­தான்!). நம் கலை­ஞர்­க­ளுக்கு உங்­க­ளின் முழு ஆத­ரவை அளி­யுங்­கள்,” என்று அப்­ப­தி­வில் அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

“கலை­கள், கலா­சா­ரத் துறை­யின் உயிர்­நாடி, இந்த நேர­டிக் கலைப் படைப்­பு­கள்” என்று வரு­ணித்த அமைச்­சர், கலைத்­தி­றத்­தைப் பாது­காத்­துக்­கொள்ள, வாழ்­வா­தா­ரங்­க­ளைத் தக்­க­வைத்­துக்­கொள்ள, நேர­டிக் கலைப் படைப்­பு­களே நிலை­யா­ன­தாக்­கும் ஆகச் சிறந்த வழி என்­றார்.

உள்­ள­ரங்க நேர­டிக் கலைப் படைப்­பு­கள் நடந்­தேற அனு­ம­திக்­கப்­படும் இடங்­க­ளின் பட்­டி­யலை தேசிய கலை­கள் மன்­றம் அதன் இணை­யத்­த­ளத்­தில் நேற்று வெளி­யிட்­டது.

அனு­மதி பெற்­றுள்ள இடங்கள்

மேடைக் கலை அரங்­கங்­கள், கலைக் காட்­சி­ய­கங்­கள், ஒரு சில அரும்­பொ­ரு­ள­கங்­கள், சமூக மன்­றங்­கள், ஹோட்­டல் நட­னக்­கூ­டங்­கள், நிகழ்ச்சி அறை­கள் ஆகி­யவை அந்­தப் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றி­ருந்­தன.

இசைக் குழுக்­கள், பாட­கர் குழுக்­கள், நட­னக் குழுக்­கள் போன்ற கலை, கலா­சார அமைப்பு­களும் தங்­க­ளின் வளா­கத்­தில் நேர­டிக் கலைப் படைப்­பு­களை ஏற்­பாடு செய்ய அனு­ம­திக்­கப்­படு­கின்­றன.

செப்­டம்­பர் 11 முதல் நேரடிக் கலைப் படைப்­பு­க­ளின் முன்­னோட்­டத் திட்­டம் வெற்­றி­க­ர­மாக நடந்­ததை அடுத்து நேற்று இந்த அறி­விப்பு வந்­தது.

பாது­காப்பு அம்­சங்கள்

நேர­டிக் கலைப் படைப்­பு­கள் மீண்­டும் தொடங்­கி­யி­ருந்­தா­லும், கலை­ஞர்­கள், பார்­வை­யா­ளர்­க­ளின் பாது­காப்­புக்கே முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டு­வ­தாக அமைச்­சர் டோங் தெரி­வித்­தார்.

இரு பகு­தி­களில் அமைந்­த­வாறு 50 பார்­வை­யா­ளர்­கள் வரை ஒவ்­வொரு நிகழ்ச்சிக்கும் ஏற்­பாட்­டா­ளர்­களை அனு­ம­திக்­க­லாம். அதே சமயம் பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­கள் நடப்­பில் இருப்­பது அவ­சி­யம்.

பார்­வை­யா­ளர்­க­ளுக்­கும் கலை­ஞர்­க­ளுக்­கும் இடையே மூன்று மீட்­டர் பாது­காப்பு இடை­வெளி இருப்­ப­து­டன், கலை­ஞர்­க­ளுக்கு இடையே 1 மீட்­டர் இடை­வெளி இருக்க வேண்­டும்.

மேடை­யி­லும் மேடைக்­குப் பின்­புறத்திலும் ஒரே சம­யத்­தில் அதி­க­பட்­ச­மாக 30 கலை­ஞர்­களும் குழு உறுப்­பி­னர்­களும் இருக்­க­லாம். ஆனால் பத்துப் பேர் வரை மட்­டுமே முகக் கவ­சம் அணி­யா­மல் இருக்க முடி­யும்.

‘டிரேஸ்­டு­கெ­தர்’ பயன்பாடு

நேர­டிக் கலைப் படைப்­பு­க­ளைக் காண வரு­வோர், நவம்­பர் 24ஆம் தேதி முதல் ‘டிரேஸ்­டு­கெ­தர்’ செயலி அல்­லது கருவி மூலம் தங்­க­ளின் ‘சேஃப்எண்ட்ரி’ வரு­கை­யைப் பதிவு செய்ய வேண்­டும்.

இவ்­வாறு ‘டிரேஸ்­டு­கெ­தர்’ வரு­கைப் பதிவு முறை மூலம் தொடர்­பு­க­ளின் தடங்­களை அறி­வ­தற்­குச் சுல­ப­மாக இருக்­கும் என்­றும் தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யும் என்­றும் தேசிய கலை­கள் மன்­றம் தெரி­வித்­தது.

இருப்­பி­னும், உணவு பானக் கடை­கள், திரு­மண விருந்து நிகழ்ச்சி­கள் ஆகி­ய­வற்­றில் நேர­டிக் கலைப் படைப்­பு­கள் இடம்பெற முடி­யாது. முகக்­க­வ­ச­மின்றி மக்­கள் கலந்து பேசும் சாத்­தி­யம் இச்­சூழல்­களில் அதி­கம் உள்­ள­தால் இக்­கட்­டுப்­பாடு தொடர்­வ­தாக மன்­றம் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!