நல்வழிப்படுத்துவதாகக் கூறி சிறுவனை 2 முறை மானபங்கம் செய்த ஆடவருக்கு சிறை, பிரம்படி, அபராதம்

நல்வழிப்படுத்துவதாகக் கூறி சிறுவனை 2 முறை மானபங்கம் செய்த ஆடவருக்கு சிறை, பிரம்படி, அபராதம்

2 mins read
f07bbdaf-d6fd-4298-99d1-ad8f0e04ab29
-

நல்ல வழி­காட்­டி­யாக இருந்து அறி­வுரை சொல்­வ­தாக ஒரு சிறு­வ­னின் தந்­தைக்கு உறு­தி­ய­ளித்­து, பின்­னர் அச்­சி­று­வனை இரண்டு முறை மான­பங்­கம் செய்த 25 வயது ஆட­வ­ருக்கு நேற்று ஈராண்டு சிறைத் தண்­டனை, ஐந்து பிரம்­ப­டி­கள், $2,500 அப­ரா­தம் ஆகியவை விதிக்­கப்­பட்­டன.

ஒரு நண்­பர் மூலம் அந்த 13 வயது சிறு­வ­னுக்­கும் ஆட­வ­ருக்­கும் பழக்­கம் ஏற்­பட, தன்­னு­டன் இர­வு­நே­ரத்­தில் மீன்­பி­டிக்க வரு­மாறு ஆட­வர் சிறு­வனை அழைத்­தார்.

சிறு­வ­னின் பெற்­றோர் அதை அனு­ம­திக்­க­மாட்­டார்­கள் என்று சிறு­வன் கூறி­யதை அடுத்து, ஆட­வர் சிறு­வ­னின் தந்­தை­யி­டம் பேசி­னார்.

தம் மக­னின் நடத்தை குறித்து சில பிரச்­சி­னை­கள் உள்­ள­தாக அந்­தத் தந்தை ஆட­வ­ரி­டம் தெரி­விக்க, தான் ஒரு நல்ல வழி­காட்­டி­யாக இருந்து அறி­வுரை கூறு­வ­தாக ஆட­வர் நம்­பிக்கை அளித்­தார்.

மீன்­பி­டிக்­கச் சென்­றது முதல் இரு­வ­ரும் தொடர்ந்து ஒன்­றாக நேரத்­தைக் கழிக்­கத் தொடங்­கினர்.

அப்­படி ஒரு நாள் இரவு ஆட­வ­ரின் வீட்­டில் தூங்­கிக்­கொண்­டி­ருந்த சிறு­வனை ஆட­வர் மான­பங்­கம் செய்­தார்.

அதிர்ச்சி, பயம், குழப்­பம் ஏற்­பட்ட நிலை­யில் சிறு­வன் பேசா­மல் தூங்­கு­வது போல் நடித்­த­தா­கக் கூறப்­பட்­டது.

தன் வீட்­டில் சிறு­வன் மறு­நாளும் தங்க முடி­யுமா என்று ஆட­வர் சிறு­வ­னின் தாயா­ரி­டம் அனு­மதி கேட்­ட­போது, தம் மக­னுக்கு ஆட­வர் ஒரு முன்­னு­தா­ர­ண­மாக இருக்­கி­றார் என்று நம்பி தாயா­ரும் இசைந்­தார். மறு­ப­டி­யும் தூங்­கிக்­கொண்­டி­ருந்த சிறு­வனை ஆட­வர் மான­பங்­கம் செய்­தார்.

அப்­போ­தும் சிறு­வன் தூங்­கு­வது போல் பாவனை செய்து பின்­னர் கழி­வ­றைக்­குச் சென்று தன்­னைச் சுத்­தப்­ப­டுத்­திக்­கொண்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

பின்­னர், தன் இரு நண்­பர்­க­ளு­டன் ஆட­வ­ரைச் சந்­தித்து அவ­ரைக் கண்­டித்­த­போது ஆட­வர் மன்­னிப்பு கோரி­னார்.

அதன் பிறகு, நடந்­த­தைப் பற்றி சிறு­வன் தன் பெற்­றோ­ரி­டம் தெரி­வித்­ததை அடுத்து போலிஸ் புகார் செய்­யப்­பட்­டது.

ஆட­வர் $10,000 பிணைத் தொகை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார் என்­றும் டிசம்­பர் 7ஆம் தேதி­யன்று நீதி­மன்­றத்­தில் சர­ண­டைந்து தன் தண்­ட­னையை நிறை­வேற்­றத் தொடங்­கு­வார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.