துன்புறுத்தப்படும் பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு சட்ட ரீதியிலான ஆதரவு

பணி­யின்­போது துன்­பு­றுத்­த­லுக்கு ஆளா­கும் பொதுப் போக்­கு­வ­ரத்து ஊழி­யர்கள், துன்­பு­றுத்­து­வோ­ருக்கு எதி­ராக சிவில் நட­வ­டிக்­கை­க­ளைத் தொடர விரும்­பி­னால், தொழிற்­சங்­கத்­தி­ட­மி­ருந்­தும் அவர்­க­ளது முத­லா­ளி­க­ளி­ட­மி­ருந்­தும் சட்ட ஆத­ர­வைப் பெறு­வார்­கள்.

அத்­த­கைய ஊழி­யர்­க­ளுக்­குத் தேவைப்­படும் சட்ட நட­வ­டிக்கை உள்­ளிட்ட அனைத்து ஆத­ர­வையும் வழங்க, சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் நான்கு பொதுப் போக்­கு­வ­ரத்து நடத்­து­நர்­கள், தேசிய போக்­கு­வ­ரத்து ஊழி­யர் சங்­கம் (என்.டி.டபிள்யு.யு) ஆகி­யவை புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தில் நேற்று கையெ­ழுத்­திட்­டன.

கொவிட்-19 தொற்­று­நோய் சூழ­லில் முகக்­க­வச விதிமுறைகள் குறித்து பய­ணி­க­ளு­டன் ஏற்­படும் சர்ச்­சை­க­ளால், சிங்­கப்­பூ­ரின் பேருந்து ஓட்­டு­நர்­கள் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளா­கும் எண்­ணிக்கை இந்த ஆண்­டில் அதி­க­ரித்­தி­ருப்­ப­தைத் தொடர்ந்து இந்த முயற்சி எடுக்­கப்­பட்­டுள்­ளது.

பொதுப் போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­க­ளின் சட்ட நட­வ­டிக்­கைக்கு தொழிற்­சங்­க­மும் அவர்­க­ளின் முத­லா­ளி­களும் ஆத­ர­வ­ளிப்­பார்­கள் என்­ப­தற்கு முன்­னர் எந்த உத்­த­ர­வா­த­மும் இல்லை.

தேசிய போக்­கு­வ­ரத்து ஊழி­யர் சங்­கத்­தின் நிர்­வாக செய­லா­ளர் திரு மெல்­வின் யோங், புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தம் மூலம், ஊழி­யர்­க­ளுக்கு இந்த உத்­த­ர­வா­தம் வழங்­கப்­ப­டு­கிறது என்று கூறி­னார்.

“இது­போன்ற தவ­றான செயல்­கள் பொறுத்­துக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது என்ற கடு­மை­யான செய்­தியை அனுப்ப விரும்­பு­கி­றோம். கட­மை­யில் இருக்­கும் பொதுப் போக்­கு­வ­ரத்து ஊழி­ய­ருக்கு எதி­ரான ஒவ்­வொரு தாக்­கு­த­லுக்கும் ஒரு போலிஸ் புகார் அளிக்­கப்­படும்,” என்று ராடின் மாஸ் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான திரு யோங் கூறி­னார்.

எஸ்­எம்­ஆர்டி, எஸ்­பி­எஸ் டிரான்­சிட், சிங்­கப்­பூர் டவர் டிரான்­சிட், கோ-அஹெட் சிங்­கப்­பூர், தேசிய போக்­கு­வ­ரத்து ஊழி­யர் சங்­கம். நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் ஆகியவை ஒரு மாத காலத்­துக்கு நடத்­திய விவா­தங்­க­ளின் விளை­வாக இந்தப் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் ஏற்­பட்­டுள்­ளது.

பேருந்து ஓட்­டு­ந­ரின் இருக்­கை­யைச் சுற்றி பிளாஸ்­டிக் திரை அமைப்­பது போன்ற தற்­காப்பு நட­வ­டிக்­கை­கள் குறித்து ஊழியர் சங்­கம் ஆலோ­சித்து வரும் வேளை­யில் இந்த ஒப்­பந்­தம் ஏற்­பட்­டுள்­ளது.

“இந்த ஆண்­டில் கிட்­டத்­தட்ட 40க்கும் மேற்­பட்ட சம்­ப­வங்­களில் எஸ்­பி­எஸ் டிரான்­சிட் ஊழி­யர்­கள் துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளா­யுள்­ள­னர். இதில் பாதி முகக்­க­வ­சம் தொடர்­பா­னது,” என்று இந்த மாத தொடக்­கத்­தில் அந்­நி­று­வ­னம் தெரி­வித்­தி­ருந்­தது.

கடந்த ஆண்டு முழு­வ­தும் இத்­த­கைய சம்­ப­வங்­கள் 33தான் இடம்­பெற்­றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon