தெம்பனிஸ் காப்பிக் கடையில் ஏணி மோதி ராட்சத மின்விசிறி சேதம்; இருவருக்கு காயம்

1 mins read
386c2c44-81d0-44b5-9a25-3f0509220791
படம்: SINGAPORE OUR HOME/FACEBOOK -

தெம்பனிஸ் காப்பி கடை ஒன்றின் உட்கூரையில் பொருத்தப்பட்ட ராட்சத மின்விசிறி ஒன்றின் மீது ஏணி தியதில் மின்விசிறி பலத்த சேதமடைந்தது.

அதன் இறகுகள் சேதமுற்று கீழ் நோக்கித் திரும்பியிருந்ததைக் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெகுவாகப் பரவின.

தெம்பனிஸ் ஸ்திரீட் 21ல் உள்ள புளோக் 201Dன் காப்பி கடையில் நடந்த இச்சம்பவத்தில் மின்விசிறியின் ஒரு இறக்கை மட்டும் விசிறியிலிருந்து விழுந்ததையும் படங்கள் காட்டின. பராமரிப்புப் பணிகளின்போது மின்விசிறி சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தச் சம்பவத்தில் 20 வயது ஆடவரும் 82 வயது மூதாட்டியும் காயமடைந்தனர். அவர்களுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது இருவரும் சுய நினைவுடன் இருந்ததாகவும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்