சுடச் சுடச் செய்திகள்

உயிரைப் பறித்த விபத்தின் தொடர்பில் மருத்துவர் மீது குற்றச்சாட்டுகள்

டான் டோக் செங் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், கவனக்குறைவாகத் தன் வாகனத்தை ஓட்டி காயம் விளைவித்ததுடன் ஓர் உயிரைப் பறித்ததன் தொடர்பிலும் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்குகிறார். 

எர்நெஸ்ட் ஃபூ வெய்ஸோங், 37, சென்ற ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதியன்று இரவு 8 மணி வாக்கில் தெம்பனிஸ் அவென்யூ 12 வழியாக வாகனத்தை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார். 

அப்போது தெம்பனிஸ் விரைவுச்சாலைக்கு இட்டுச் செல்லும் சாலைச் சந்திப்புக்கு வந்தார். அங்கு வலது புறம் திரும்பும்போது மற்ற வாகனங்களுக்கு வழிவிட ஃபூ தவறிவிட்டார்.

இதனால் சாலையின் எதிர்த் தடத்தில் நேரே சென்றுகொண்டிருந்த ஒரு காருடன் மோதிவிட்டார்.

மோதிய காரின் ஓட்டுநரான 68 வயது திரு சூன் ஜின் ஜோக்குக்கு நெஞ்சு வலி உட்பட காயங்கள் ஏற்பட்டன.

அவரின் காரில் பயணியாக இருந்த 96 வயது திருவாட்டி ஹெங் ஃபோங் போயி, காயங்கள் ஏற்பட்டு பின்னர் உயிரிழந்துவிட்டார்.

$10,000 பிணைத் தொகையில் விடுவிக்கப்பட்டுள்ளார் ஃபூ. அவர் மீதான வழக்கு   நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon