டிரேஸ்டுகெதர் சாதனத்தைப் பெற மார்சிலிங் சமூக மன்றத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

மார்சிலிங் சமூக மன்றத்தில் டிரேஸ்டுகெதர் சாதனங்களைப் பெற்றுக்கொள்ள இன்று நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

நேற்று இந்தச் சாதனங்களின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட நாட்களில் இந்தச் சாதனங்களை விநியோகிக்க முடிவு செய்யப்பட்ட பிறகு, மார்சிலிங் சமூக மன்றத்தில் முதலில் இந்த விநியோகம் தொடங்கியது.

காலை 9.45 மணிக்கே சுமார் 100 பேர் வரிசையில் காத்திருந்தனர். காலை 11.30 மணி வரை கூட்டம் தொடர்ந்து அதிகரித்தது.

மொத்தமிருந்த 5 விநியோகக் கூடங்களில் ஒன்று மூத்தோருக்கும் உடல்நலப் பிரச்சினைகள் உடையோருக்கும் ஒதுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை மக்கள் காத்திருந்து சாதனங்களை பெற்றுச் சென்றனர்.

இன்று ஒரு நாள் மட்டுமே அங்கு டிரேஸ்டுகெதர் சாதனம் விநியோகிக்கப்படுவதாக எண்ணி இன்றே பெற்றுக்கொள்ள வந்ததாக பலர் தெரிவித்தனர்.

தீவின் மற்ற பகுதிகளில் இருக்கும் 107 சமூக மன்றங்களில் இந்த மாதம் முதல் டிசம்பர் வரை படிப்படியாக டிரேஸ்டுகெதர் சாதன விநியோகம் தொடங்கும்.

ஒவ்வொரு தொகுதியிலும் சாதனம் விநியோகிக்கப்படுவது தொடர்பான தகவல்களுக்கு Token Go Where இணையப்பக்கத்தை நாடலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!