கொவிட்-19 பாதிப்பைக் கண்டறியும் ‘பிரெத்தோனிக்ஸ்’ கருவி; மூச்சுக்காற்று சோதனை விரைவில் பரவலாக்கப்படும்

அதி­க­மா­ன­வர்­கள் மிக எளி­தாக மூச்­சுக்­காற்­றின் மூலம் கொவிட்-19 கிருமி சோத­னையை செய்­து­கொள்­வ­து­டன், ஒரு நிமி­டத்­திற்­குள் அதன் முடி­வு­களை அறிந்­து­கொள்­வது சிங்கப்பூரில் விரை­வில் சாத்­தி­ய­மா­க­லாம்.

மூச்­சுக்­காற்­றைக் கொண்டு கிரு­மி­யைக் கண்­ட­றி­யும் கரு­வியை சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ‘பிரெத்­தோ­னிக்ஸ்’ நிறு­வ­னம் உரு­வாக்­கி­யுள்­ளது.

தேசிய தொற்­று­நோய்த் தடுப்பு நிலை­யத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட முன்­னோட்­டச் சோத­னை­களில் கிடைத்த வெற்­றி­யைத் தொடர்ந்து, வரும் மாதங்­களில் பொது இடங்­களில் சோத­னையை மேற்­கொள்­வது குறித்து தற்­போது சுகா­தார அமைச்­சு­டன் பேச்சு நடத்தி வரு­வ­தாக அந்த நிறு­வ­னம் நேற்­றுத் தெரி­வித்­தது.

தற்­போது 180 நோயா­ளி­க­ளி­டம் சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டது. இத­னு­டன் மேலும் 250 நோயா­ளி­க­ளி­டம் சோதனை நடத்­து­வது குறித்து தேசிய தொற்­று­நோய்த் தடுப்பு நிலை­யத்­து­டன் பேசி வரு­வ­தாக பிரெத்­தோ­னிக்ஸ் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வா­கி­யான டாக்­டர் ஜியா ஸுனன் தெரி­வித்­தார்.

அத்­து­டன், சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தின் அனு­ம­தி­யைத் தொடர்ந்து, மாநாட்டு நிகழ்ச்­சி­கள் போன்ற பெரிய நிகழ்­வு­களில் சோத­னையை மேற்­கொள்ள சிங்­கப்­பூ­ரின் முக்­கிய விருந்­தி­னர் வர­வேற்பு நிறு­வ­னம் ஒன்­று­டன் பேசி வரு­வ­தா­க­வும் நிறு­வ­னத்­தின் தலை­வ­ரான இணை பேரா­சி­ரி­யர் நியோ கொக் பெங் கூறி­னார்.

எனி­னும், எந்த நிறு­வ­னம் என அவர் குறிப்­பி­ட­வில்லை. இந்­தச் சோத­னைக்கு, ஒரு­வர் தமது மூச்­சுக்­காற்றை ஒரு குழாய்க்­குள் செலுத்த வேண்­டும்.

நோயாளி ஒரு­வ­ரின் மூச்­சுக்­காற்­றில் ஏற்­படும் வேதி­யி­யல் மாற்­றங்­களை இந்­தப் பரி­சோ­த­னைத் தொகுப்பு பதி­வு­ செய்­கிறது.

ஒவ்­வொரு முறை­யும் மூச்சை வெளி­யில் விடும்­போது அதில் கண்­ணுக்­குத் தெரி­யாத எளி­தில் ஆவி­யா­கக்­கூ­டிய வேதிப்­பொ­ருள்­கள் (விஓசி) இருக்­கும். மனித செல்­களில் நடை­பெ­றும் பல்­வேறு உயிர்­வேதி வினை­க­ளின்­போது அவை உரு­வாக்­கப்­படும்.

நல்ல உடல்­ந­லத்­து­டன் இருக்­கும் ஒரு­வ­ரின் ‘விஓசி’ பதி­வும் நோய்­வாய்ப்­பட்­டுள்ள ஒரு­வ­ரின் ‘விஓசி’ பதி­வும் வெவ்­வே­றாக இருக்­கும். இத­ன­டிப்­ப­டை­யில், கொரோனா தொற்று போன்ற நோய்­க­ளால் ஒரு­வர் பாதிக்­கப்­பட்­டுள்­ளாரா எனக் கண்­ட­றிந்து விட­லாம்.

‘பிரெத்­தோ­னிக்ஸ்’ சோத­னை­யில் விரை­வா­க­வும் முடிவை அறி­ய­லாம் என்­ப­து­டன் இச்­சோ­த­னை செய்ய ‘பிசி­ஆர்’ சோத­னை­க­ளைப் போன்று சிறப்­புப் பயிற்சி பெற்ற பணி­யா­ளர்­களும் ஆய்­வ­க­மும் தேவை­யில்லை. இந்­தக் கரு­வியை இயக்க ஒரு மணி நேரப் பயிற்சி போதும். கணி­னியை இயக்­கத் தெரிந்த எவ­ரும் இதனை இயக்­க­லாம் என்று நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யும் இணை நிறு­வ­ன­ரு­மான திரு டு ஃபாங் கூறி­னார்.

முன்­னோட்­டச் சோத­னை­களில் 90 விழுக்­காட்­டிற்­கும் மேல் துல்­லி­ய­மான முடி­வு­கள் கிடைத்து உள்­ளன. கிரு­மித் தொற்­றுள்­ள­வர்­கள் 93%, நோய்த்­தொற்று இல்­லா­த­வர்­கள் 95% துல்­லி­ய­மா­கக் கணிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மூச்­சுக்­காற்று பரி­சோ­த­னைக்கு ஆகும் செலவு சோத­னை­க­ளின் எண்­ணிக்கை உட்­பட பல­வற்­றைப் பொறுத்து அமை­யும். ஒரு கரு­வி­யைப் பயன்­ப­டுத்தி மாதத்­திற்கு 5,000 பேர் சோதிக்­கப்­பட்­டால், ஒவ்­வொரு சோத­னைக்­கும் 20 அமெ­ரிக்க டாலரே ஆகும் என்­றார் பேரா­சி­ரி­யர் நியோ. தற்­போது, ​​இங்கே பிசி­ஆர் சோதனை செய்­து­கொள்­ளும் ஒரு­வர் 200 வெள்ளி செலுத்­து­வ­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!