குறைந்த ஊதிய ஊழியர்களுக்கான முத்தரப்பு செயற்குழு

குறைந்த வரு­வாய் பெறு­வோ­ரின் சம்­ப­ளத்­தை­யும் அவர்­க­ளின் நல­வாழ்­வை­யும் மேம்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­களை ஆராய முத்­த­ரப்­புப் பங்­கா­ளி­கள் இணைந்து முத்­த­ரப்­புச் செயற்­குழு ஒன்றை அமைத்­துள்­ளன.

தொழிற்­சங்க பிர­தி­நி­தி­கள் அடங்­கிய இக்­கு­ழு­வுக்கு மனி­த­வள மூத்த துணை­ய­மைச்­சர் ஸாக்கி முகம்­மது தலைமை தாங்­கு­வார் என்று மனி­த­வள அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

மேலும் தொழிற்­சங்க காங்­கி­ர­சின் தலை­மைச் செய­லா­ளர் திரு இங் சீ மெங், மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ, சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னத்­தின் தலை­வர் டாக்­டர் ராபர்ட் யாப் ஆகி­யோர் குழு­வுக்கு ஆலோ­ச­கர்­க­ளா­கப் பணி­யாற்­று­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகால­மாக குறைந்த ஊதி­யம் பெறு­வோ­ரின் வரு­வாயை உயர்த்த அர­சாங்­கம் பல நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வந்­துள்­ளது.

2007ஆம் ஆண்­டில் அறி­மு­க­மா­ன­தில் இருந்து வேலை­ந­லன் துணை வரு­மா­னத் (WIS) திட்­டம் தொடர்்ந்து மேம்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது.

இதன்­மூ­லம் குறைந்த சம்­ப­ளம் பெறும் 400,000 பேரின் வரு­வாய் ஆண்­டுக்கு 30% வரை அதி­க­ரித்­த­து­டன் அவர்­க­ளது ஓய்­வூ­தி­யத் தொகை­யும் கூடி­யது.

அத்­து­டன் 2007 முதல் 2019 வரை­யில் குறைந்த வரு­வாய் ஈட்­டும் 890,000 பேருக்கு $6.8 பில்­லி­யன் வழங்­கப்­பட்­டுள்­ளது.

படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை, சுமார் 80,000 ஊழி­யர்­களின் மேம்­பாட்­டுக்கு உத­வி­யுள்­ளது.

குறைந்த ஊதி­யம் பெறு­வோரின் நல்­வாழ்வை வேலை­நலன் திட்­டங்­கள் உறு­திப்­ப­டுத்­து­வ­து­டன், அவர்­க­ளின் பங்­க­ளிப்­புக்கு பொது­மக்­க­ளின் நன்­றி­யு­ணர்­வை­யும் உறு­திப்­ப­டுத்த முயற்சி செய்­கிறது.

குறைந்த வரு­மான ஊழி­யர்­களை மேலும் மேம்­ப­டுத்த, அவர்­களது சம்­ப­ளங்­களை ஆய்வு செய்ய வேண்­டு­மென்­பதை முத்­தரப்­புக் குழு உணர்­கிறது.

குறைந்த ஊதிய ஊழி­யர்­கள் ஏனைய சிங்­கப்­பூ­ரர்­க­ளு­டன் சேர்ந்து வலு­வாக உயர்­வதை உறுதி­செய்­த­தாக, எதிர்­கா­லத்­தில் வர்த்­த­கங்­களும் ஊழி­யர்­களும் விளங்க முடி­யும் என்று அறிக்கை குறிப்­பிட்­டது.

தொழிற்­சங்­கங்­கள், முத­லா­ளி­கள், ஏனைய முக்­கிய பங்­கு­தாரர்­களு­டன் விரி­வான ஆலோ­ச­னை­களைச் செயற்­குழு மேற்­கொள்­ளும். இதை முன்­னிட்டு சமூ­கத்­தி­ன­ரின் கருத்­து­க­ளை­யும் செயற்­குழு திரட்­டவுள்ளது.

இச்­செ­யற்­குழு அடுத்த ஆண்டு மத்­திக்­குள் தனது இடைக்­கால அறிக்­கையை வெளி­யி­டு­வ­தாக இலக்கு கொண்­டுள்­ளது.

தொடர்ந்து 2022ஆம் ஆண்­டின் முதல் காலாண்­டில் தனது பணியை நிறை­வேற்­றத் திட்­ட­மிட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!