மூன்று எம்ஆர்டி தடங்களில் ஒரே நேரத்தில் கோளாறு; நிலைமை மோசமாகக் காரணமான 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

மூன்று எம்ஆர்டி தடங்களில் ஒரே நேரத்தில் கோளாறு; நிலைமை மோசமாகக் காரணமான 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

1 mins read
fd75612b-e81e-4861-bb26-1f9f2e018c3a
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கம்­பி­வ­டத்­தின் ஒரு பகுதி எரிந்து போன­து­டன் மின்­சுற்­றுத் தகர்ப்­பான் ஒன்று பழு­த­டைந்­தது. இதுவே அக்­டோ­பர் 14ஆம் தேதி­யன்று மூன்று எம்­ஆர்டி தடங்­களில் பெரும் சேவைத்­தடை ஏற்­பட்­ட­தற்­குக் கார­ண­மா­கும்.

மூன்று மணி நேரம், 36 நிமி­டம் நீடித்த சேவைத்­தடை சம்­ப­வத்­தால் கிட்­டத்­தட்ட 123,000 பய­ணி­கள் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இது குறித்து விசா­ரணை மேற்­கொண்ட நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம், நேற்று முன்­தி­னம் அதன் கண்­டு­பி­டிப்­பு­களை வெளி­யிட்­டது.

பாதிக்­கப்­பட்ட பய­ணி­களில், வடக்கு-தெற்கு மற்­றும் கிழக்கு-மேற்கு ரயில் பாதை­களில் நின்­று­போன 12 ரயில்­களில் 6,500 பேர் இருந்­த­னர். வட்ட ரயில் பாதை­யில் நின்­று­போன மூன்று ரயில்­களில் 275 பய­ணி­கள் இருந்­த­னர்.

இந்­நி­லை­யில் எம்­ஆர்டி சேவைத் தடையை மேலும் மோச­மாக்­கி­ய­தன் தொடர்­பில் இரண்டு எஸ்­எம்­ஆர்டி ஊழி­யர்­கள் பணி­யி­லி­ருந்து இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இரு­வ­ரும் துணை மின்­நி­லை­யத்­தில் இருந்த உப­க­ர­ணங்­க­ளைக் கொண்டு செய்த தவ­றான கணிப்­பி­னால் வட்ட ரயில் பாதை­யும் அக்­டோ­பர் 14ஆம் தேதி­யன்று பாதிக்­கப்­பட்­டது.