இறால் ஓடுகளைக் கொண்டு மருந்து தயாரிக்கும் முயற்சி

இறால் ஓடுகளைக் கொண்டு மருந்து தயாரிக்கும் முயற்சி

1 mins read
7bd5b823-a6d5-4557-ab07-50490ed88a96
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் (என்­யு­எஸ்) சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் இரு­வர், இறால் ஓடு­களைக் கொண்டு 'பார்­கின்­சன்ஸ்' நோயைக் குணப்­ப­டுத்­தும் மருந்து ஒன்­றைத் தயா­ரிக்­கும் புதிய முறையை உரு­வாக்­கி­யுள்­ள­னர்.

மேலும், மரத்தூளைக் கொண்டு சத்து மருந்து தயா­ரிக்­கும் முயற்­சி­யி­லும் அவர்­கள் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

கழிவுப் பொருட்­களில் உள்­ள­டங்­கிய மருத்­து­வக் குணங்­க­ளைக் கண்­டு­பி­டிப்­பது அவர்­க­ளது நோக்­கம்.

எடுத்­துக்­காட்­டாக, காய்ந்த இறால் ஓடு­களை அரைத்து தூளாக்கி, E.coli எனப்­படும் ஒரு­வகை பாக்­டீ­ரி­யா­வின் உத­வி­யுடன் அது tyrosine எனும் அமினோ அமி­ல­மாக தயா­ரிக்­கப்­ப­டு­கிறது.

இந்த அமினோ அமி­லத்தை L-dopa எனப்­படும் மருந்­தாக ஆய்­வா­ளர்­கள் மாற்­றி­யுள்­ள­னர்.

நரம்­பி­யல் பிரச்­சி­னை­யான 'பார்­கின்­சன்ஸ்' நோயை குணப்­ப­டுத்த அது பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

மர­பி­யல் பொறி­யி­யல் மூலம் E.coli போன்ற பாக்­டீ­ரியா மேம்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக என்­யு­எஸ் ரசா­யன, உயிர் மூலக்­கூறு பொறி­யி­யல் துறை­யைச் சேர்ந்த உத­விப் பேரா­சிரியர் ஸாவ் காங் தெரி­வித்­தார். இந்­தத் திட்­டத்­தில் ஈடு­படும் இரு ஆய்­வா­ளர்­களில் அவ­ரும் ஒரு­வர்.