சிறிய, நடுத்தர நிறுவனங்களின் 4,500 இளம் வழக்கறிஞர்கள் உறுப்பினர் கட்டணம் ரத்து

சிறிய, நடுத்­தர சட்ட நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த இளம் வழக்­க­றி­ஞர்­கள் அடுத்த ஆண்டு முதல் கட்­டாய உறுப்­பி­னர் கட்­ட­ணத்தை சிங்­கப்­பூர் சட்­டக் கழ­கத்­துக்­குச் செலுத்­தத் தேவை இல்லை என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால் பொரு­ளி­யல் பாதிக்­கப்­பட்டு இருக்­கும் சூழ­லில் இளம் வழக்­க­றி­ஞர்­க­ளுக்கு இந்­தச் சலுகை வழங்­கப்­ப­டு­வ­தாக கழ­கம் நேற்று தெரி­வித்­தது.

சட்ட நிபு­ணர்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்டு இருக்­கும் இந்த இரண்­டா­வது நிவா­ர­ணத் தொகுப்­பின் மூலம் $1 மில்­லி­யன் அள­வி­லான கட்­ட­ணத்­தைத் தள்­ளு­படி செய்ய கழ­கம் உறு­தி­பூண்­டுள்­ளது.

இச்­ச­லு­கை­யால் சுமார் 4,500 சட்ட நிபு­ணர்­கள் பய­ன­டை­வர். இச்­ச­லு­கைக்­கான தகு­தி­களும் அறி­விக்­கப்­பட்டு உள்­ளன.

2016 முதல் வழக்­க­றி­ஞர் சங்­கத்­தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட வழக்­க­றி­ஞர்­களும் பத்து அல்­லது அதற்­குக் குறை­வான எண்­ணிக்­கை­யைக் கொண்­டி­ருக்­கும் சட்ட நிறு­வ­னத்­தில் பணி­பு­ரி­வோ­ரும் இதற்­குத் தகு­தி­பெ­று­வர்.

வழக்­க­றி­ஞர்­க­ளுக்­கான உறுப்­பி­னர் கட்­ட­ணம் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் $128.40 முதல் $374.50 வரை வேறு­ப­டு­கிறது.

ஏப்­ரல் மாதம் கழ­கம் நடத்­திய ஆய்­வின் அடிப்­ப­டை­யில் வழக்­க­றி­ஞர்­க­ளுக்கே அதிக ஆத­ரவு தேவைப்­ப­டு­வ­தாக கழ­கத்­தின் தலைமை நிர்­வாகி செரின் வீ தெரி­வித்­தார்.

“சிரம நிலை­யி­லி­ருந்து விரை­வில் மீள்­வோம் என்­ப­தற்­கான அறி­குறி இல்­லாத நிலை­யில் இரண்­டா­ம் கட்ட நிவா­ர­ணத்தை அறி­வித்­தி­ருக்­கி­றோம்.

“முதற்­கட்ட நிவா­ர­ணம் ஐந்து மாதங்­க­ளுக்கு முன்­னர் வழங்­கப்­பட்­டது. தொடர்ந்து சவா­லான காலத்தை எதிர்­நோக்கி வரும் பல உறுப்­பி­னர்­க­ளுக்கு கழ­கம் ஆத­ர­வுக்­க­ரம் நீட்­டு­கிறது,” என்­றார் திரு­வாட்டி வீ.

முதற்­கட்ட நிவா­ரண அறி­விப்­பின்­படி ஒவ்­வோர் உறுப்­பி­னர்­க­ளின் கணக்­கி­லும் $150 வரவு வைக்­கப்­படும்.

கழ­கத்­தின் வெளி­யீ­டு­களை வாங்­க­வும் கற்­றல் திட்­டங்­களில் சேர­வும் இத்­தொ­கையை அவர்­கள் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

LawNet இணையவாசலுக்கான இரண்டு மாத அடிப்படை சந்தாத் தொகையும் அப்போது தள்ளுபடி செய்யப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon