350க்கும் மேற்பட்ட சமூகப் பராமரிப்பு ஊழியர்களுக்கு விருது

350க்கும் மேற்பட்ட சமூகப் பராமரிப்பு ஊழியர்களுக்கு விருது

2 mins read
cae191e4-917c-4299-9ea3-3266ce4b4713
படம்: AGENCY FOR INTEGRATED CARE -

உன்­ன­தச் சேவை, கடப்­பாடு ஆகி­ய­வற்றை அடை­யா­ளம் கண்டு 350க்கும் மேற்­பட்ட சமூ­கப்பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்­கும் அமைப்­பு­க­ளுக்­கும் நேற்று மெய்­நி­கர் விரு­து வழங்கும் விழா மூலம் விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நடத்­தப்­படும் சமூ­கப் பரா­ம­ரிப்பு உன்­னத விரு­து­கள் முதன்­மு­த­லாக 2014ஆம் ஆண்­டில் வழங்­கப்­பட்­டன.

நாளை சமூ­கப் பரா­ம­ரிப்­புத் தினம் அனு­ச­ரிக்­கப்­ப­டு­கிறது. இதனை முன்­னிட்டு, இவ்­வாண்டு விருது பெறு­வோ­ரின் பெயர்­களை ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட பரா­ம­ரிப்பு முகவை அறி­வித்தது.

மெய்­நி­கர் விரு­து வழங்கும் விழா­வில் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி சிறப்பு விரு­ந்தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

"இந்த ஆண்­டில் இதற்கு முன்பு அனு­ப­விக்­காத சவால்­களை நாம் எதிர்­கொண்டு வரு­கி­றோம். இந்­நி­லை­யில், நமது சமூ­கப் பரா­ம­ரிப்­புத் துறை தொடர்ந்து கடப்­பாட்­டு­ட­னும் மீள்­தி­ற­னு­ட­னும் செயல்ப­டு­கிறது. இது மிகவும் பெரு­மைக்­கு­ரி­யது," என்று அமைச்­சர் மச­கோஸ் கூறி­னார்.

தங்க விருது வென்­ற­வர்­களில் ஒரு­வ­ரான திரு­வாட்டி தியோங் ஹூன் யின்னை அமைச்­சர் மேற்­கோள்­காட்டி பேசி­னார்.

திரு­வாட்டி தியோங் கடந்த 16 ஆண்­டு­க­ளாக குவோங் வாய் ஷியூ மருத்­து­வ­ம­னை­யில் பணி­பு­ரிந்து வரு­கி­றார்.

தையல் கலை­யில் அதிக ஆர்­வம் இருக்­கும் ஒரு­வ­ரி­டம் தமது மருத்­து­வ­ம­னை­யில் உள்ள மூத்­தோர் பரா­ம­ரிப்பு மையத்­தில் இருக்­கும் முதி­யோ­ரு­டன் அதைப் பகிர்ந்து­கொள்ள திரு­வாட்டி தியோங் ஊக்­கு­வித்­த­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

இதை­ய­டுத்து, 2019ஆம் ஆண்­டில் அந்த மருத்­து­வ­ம­னை­யில் தையல் கலைக் குழு ஒன்று அமைக்­கப்­பட்­டது.

தங்க விருது பெற்ற 11 பேர் தலா $200, பரி­சுக் கோப்பை, சான்­றி­தழ் ஆகி­ய­வற்­றைப் பெற்­ற­னர்.

348 பேர் வெள்ளி விரு­தைப் பெற்­ற­னர். அவர்­க­ளுக்­குத் தலா $100யும் சான்­றி­த­ழும் வழங்­கப்­பட்­டது.