‘டிரேஸ்டுகெதர்’ மூலம் 40 பள்ளிவாசல்களில் அனுமதி

சிங்­கப்­பூ­ரில் உள்ள 71 பள்­ளி­வாசல்­களில் 40ல் அங்கு தொழுைகக்குச் செல்­வோர் ‘டிரேஸ்­டு­கெ­தர்’ செயலி­யைப் பயன்­ப­டுத்த முடி­யும்.

இவ்­வாண்டு இறு­தி­வாக்கில் அனைத்து பொது இடங்­க­ளுக்­கும் செல்ல விரும்­பு­வோர் இந்­தச் செய­லியைக் கட்­டா­யம் பயன்­ப­டுத்த வேண்­டும் என்ற விதி­முறை வர­ இருக்கிறது.

இந்நிைலயில், தற்­போது பள்ளி­வா­சல்­களில் இதை முயிஸ் எனப்­படும் சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருப்­பது அதற்கு முன்­னோ­டி­யா­கக் கரு­தப்­படு­கிறது.

டிரேஸ்­டு­கெ­தர் செயலி அல்­லது அதற்­காக வழங்­கப்­பட்­டு உள்ள சாத­னப் பயன்பாடு, முதற்கட்டமாக இம்மாதம் 19ஆம் தேதி 24 பள்­ளி­வா­சல்­களில் அறி­மு­கம் கண்­டது. பின்­னர் இரு நாள்கள் கழித்து அக்­டோ­பர் 23ஆம் தேதி­யன்று மேலும் 16 பள்­ளி­வா­சல்­களில் அது அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

எஞ்சியுள்ள 31 பள்­ளி­வா­சல்­களில் எப்பொழுது முதல் டிரேஸ் டுகெதர் அல்­லது சாத­னப் பயன்பாடு அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் அல்­லது கட்­டா­ய­மாக்­கப்­படும் என்பது குறித்த விவரத்தை முயிஸ் தெரி­விக்­க­வில்லை.

தற்­போ­தைய நிலை­யில், பள்­ளி­வா­சல்­க­ளுக்­குச் செல்­வோர் சேஃப் என்ட்ரி பதிவு முறையை அல்­லது சிங்­பாஸ் கைபே­சிச் செய­லியை அல்­லது அடை­யாள அட்­டை­யில் உள்ள பட்­டைக் குறி­யீட்­டைப் பயன்­படுத்­திப் பள்­ளி­வா­சல்­களுக்­குச் செல்­ல­லாம்.

எனி­னும், பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வருகை தரு­வோர் இந்­தப் புதிய ெசய­லியைப் பதி­வி­றக்­கம் செய்து பயன்­ப­டுத்த ஊக்­கு­விக்­கும்­படி பள்ளி­வா­சல்­களில் பணி­பு­ரி­வோ­ரி­டம் கூறப்­பட்­டுள்­ளது. இந்­தப் புதிய செய­லி­யையோ திரை­ய­ரங்­கு­கள், உண­வ­கங்­கள், வேலை­யி­டங்­கள், பள்­ளி­கள், கடைத்­தொ­கு­தி­கள் போன்ற பொது இடங்­க­ளுக்குச் செல்­வோர் கட்­டா­ய­மா­கப் பயன்­படுத்த வேண்­டும் என்று கடந்த 20ஆம் தேதி அறி­வித்­தது.

இதில் ஆர்ச்­சர்ட் சாலை­யில் உள்ள அல்-ஃபாலா என்ற பள்ளி வா­சல்­ ஒரு­படி மேலே சென்று இந்தச் செய­லியை பயன்­ப­டுத்­து­வோர் எளி­தில் நுழைய வச­தி­யாக சிறப்பு வழித்­த­டத்தை ஏற்­ப­டுத்­தி­ இருக்கிறது.

“இச்செய­லியை பயன்­படுத்து­வதன் மூலம் பள்­ளி­வா­சலுக்­குள் செல்­வது எளி­தாக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு வரும் பெரும்­பா­லானோர் சுற்று வட்­டா­ரத்­தில் வேலை பார்ப்­பவர்­கள். எனவே அவர்­க­ளுக்கு நேரம் மிச்­ச­மா­வது முக்­கி­யம்.

“இதற்கு முன்­னர் நாங்­கள் தொழுைகக்கு வரு­வோரை அடை­யாள அட்­டைக் குறி­யீட்டை பயன்­படுத்­தியோ அல்­லது சேஃப்என்ட்ரி குறி­யீட்டு முறை­யைப் பயன்­ப­டுத்­தியோ அனு­ம­தித்­தோம். அதற்­குச் சிறிது நேரம் பிடிக்­கும்,” என்று பள்­ளி­வா­ச­லின் நிர்­வா­கத் தலை­வர் கைருல் அன்­வார் விளக்­கி­னார்.

மேலும் இந்­தச் செய­லி­யின் மூலம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வரு­வோ­ரின் தொடர்­புத் தடங்­களை அப்­போ­தைக்கு அப்­போது தெரிந்து­கொள்ள முடி­வ­தால் வரு­கை­புரிவோருக்கு கூடு­தல் மன­நிம்­மதியை அளிக்­கிறது என்­றும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!