சாங்கி விமான நிலைய முன்களப் பணியாளர்களுக்கு 14 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை

சாங்கி விமான நிலை­யத்­தில் பய­ணி­க­ளு­டன் நெருங்­கிப் பணி­யாற்ற வேண்­டி­யுள்ள எச்­சில்/சளி மாதிரி சேக­ரிப்பு உத­வி­யா­ளர்­கள் போன்ற முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் இரண்டு வாரங்­க­ளுக்கு ஒரு­முறை கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­படு­வர். அத்­து­டன், அவர்கள் முழுக் கவச உடை அணிந்து பணி­யாற்ற வேண்­டும்.

கடந்த வாரம் முதல் ஏறத்­தாழ 2,500 விமான நிலைய ஊழி­யர்­கள் கொரோனா பரி­சோ­தனை செய்­து­கொண்­ட­னர். அவர்­களில் எவ­ரும் தொற்­றால் பாதிக்­கப்­ப­ட­வில்லை எனச் சோதனை முடி­வு­கள் காட்­டின. வரும் நாள்­களில் இன்­னும் ஆயி­ரம் ஊழி­யர்­க­ளுக்­குப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­படும்.

போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் நேற்று முன்­தி­னம் இந்த விவ­ரங்­களை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் தெரி­வித்­தார்.

மூன்­றா­வது முனைய ஊழி­யர்­களில் இரு­வரை கொரோனா தொற்­றி­யது கடந்த சனிக்­கி­ழமை உறுதி­செய்­யப்­பட்­டது. அவர்­களில் ஒரு­வர் பாது­கா­வல் அதி­காரி; மற்றவர் மூன்­றா­வது முனை­யத்­தில் உள்ள ‘ராஃபிள்ஸ் மெடிக்­கல்ஸ்’ எச்­சில்/சளி மாதிரி சேக­ரிப்பு உதவி­யா­ளர்.

அவர்­கள் இரு­வ­ரும் பய­ணி­களு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­தா­க­வும் அவர்­க­ளு­டன் அணுக்­கத் தொடர்­பில் இருந்­தோ­ரைக் கண்­ட­றி­யும் வகை­யில் தடமறி­யும் பணி­கள் இடம்­பெற்று வரு­வ­தா­க­வும் அமைச்­சர் ஓங் குறிப்­பிட்­டார்.

அவ்­வி­ரு­வ­ரும் முகக்­க­வ­ச­மும் கையு­றை­களும் அணிந்­தி­ருந்­த­னர். ஆயி­னும், அவை போதாது எனக் கரு­து­வ­தால் நடை­மு­றை­யைக் கடு­மை­யாக்க இருப்­ப­தாக திரு ஓங் சொன்னார்.

மற்ற முன்­க­ளப் பணி­யா­ளர்­கள், வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைப் போலவே, விமான நிலைய ஊழி­யர்­களும் குறிப்­பிட்ட இடை­வெ­ளி­யில் கொரோனா பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வர் என்றார் அவர்.

“பய­ணி­க­ளு­டன் நெருங்­கிப் பணி­யாற்ற வேண்­டி­யுள்ள ஊழி­யர்­க­ள் முழுக் கவச உடை அணிய வேண்­டும். தூய்மை, கிரு­மி­நா­சினி தெளிப்­புப் பணி­க­ளை­யும் சாங்கி விமான நிலை­யக் குழு­மம் முடுக்கி­வி­டும்,” என்று அமைச்­சர் கூறினார்.

2021 மார்ச்சுக்குள் புதிய பரிசோதனை ஆய்வகம்

அடுத்த ஆண்­டின் முதல் காலாண்­டிற்­குள் சாங்கி விமான நிலை­யத்­தில் புதிய கொவிட்-19 பரி­சோ­தனை ஆய்­வ­கம் திறக்­கப்­படும். ஒன்­றரை மணி நேரத்­தில் முடி­வு­களை அறிந்­து­கொள்­ளும் வகை­யிலான பரி­சோ­த­னைத் தொகுப்­பு­கள் அந்த ஆய்­வ­கத்­தில் பயன்­படுத்­தப்­படும்.

விரை­வுப் பரி­சோ­த­னை­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வது குறித்து அதி­கா­ரி­கள் ஆராய்ந்து வரு­வ­தால், கொரோனா பாதிப்பு அபா­யம் குறை­வாக உள்ள நாடு­களில் இருந்து பய­ணி­க­ளுக்­கான காத்­தி­ருப்பு நேரம் மேலும் குறை­யக்­கூ­டும் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­தார்.

இப்­போது வெளிப்­புற ஆய்­வ­கங்­க­ளின் துணை­யு­டன் நாளொன்­றுக்கு 10,000 மாதி­ரி­கள் வரை சாங்கி விமான நிலை­யத்­தால் பரி­சோ­திக்க முடி­யும் என்­றும் தேவைப்­பட்­டால் அந்த எண்­ணிக்­கையை இரட்­டிப்­பாக்க முடி­யும் என்­றும் கூறப்­பட்­டது.

விமான நிலை­யத்­தி­லேயே புதிய ஆய்­வ­கத்­தைத் திறப்­ப­தன் மூலம் அங்­கி­ருந்து வேறு ஆய்­வ­கங்­களுக்கு மாதி­ரி­களை அனுப்ப வேண்­டி­ய­தில்லை என்­றும் அதிக நேரம் மிச்­ச­மா­கும் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!